
ஹார்மோன் சமநிலையின்மையால் PCOS அல்லது PCOD பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுவதுடன், கருவுறுதலிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. PCOD பிரச்சனையை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது. இதற்காக நீங்கள் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும், ஒரு சில உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றினால் மட்டுமே PCOD பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.
பிற்காலத்தில் PCOD பிரச்சனையால் ஏற்படக்கூடிய சர்க்கரை நோய் இதய நோய் போன்ற உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கவும் கருவுறுதலை மேம்படுத்தவும் ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!

pcos ஐ நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. இருப்பினும் அதன் அறிகுறிகளை சமாளிக்கலாம். இதன் மூல PCOD பிரச்சனையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தடுக்கலாம். இதற்கு உதவக்கூடிய ஒரு ஆரோக்கியமான டயட் பிளானை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். PCOD டயட் பிளானை ஊட்டச்சத்து நிபுணரான பிரீத்தி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும் மறுநாள் காலையில் இந்த தண்ணீருடன் 5 ஊற வைத்த பாதாம் பருப்புகளையும் சாப்பிடுங்கள். வெந்தயம் குளுக்கோஸின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். இதனால் இன்சுலின் உணர்திறனும் அதிகரிக்கும். இந்த நீர் உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவுகள் மற்றும் ஹார்மோன்களை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
முளைகட்டிய பயறு, முட்டையின் வெள்ளை கரு, பச்சை பயறு தோசை, முழு தானியங்களை கொண்டு செய்யப்பட்ட பிரட் அல்லது சப்பாத்தி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். காலை உணவுக்கு புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இன்சுலின், ஈஸ்ட்ரோஜன், டஸ்டெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை மேம்படுத்தலாம்.

காலை மற்றும் மதிய உணவுக்கு இடையே உள்ள அந்த இடைப்பட்ட நேரத்தில் இளநீர், கிரீன் டீ அல்லது ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடலாம். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ, நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ள இளநீர் உங்களுடைய வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.
தானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட சப்பாத்தி (1-2) + காய்கறி + சாலட் + பிரவுன் ரைஸ் + பருப்பு /காய்கறி குழம்பு. உங்களுடைய மதிய உணவில் கடினமான கார்போஹைட்ரேட் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
கிரீன் டீயுடன் வறுத்த தாமரை விதைகளை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.
க்ரில் செய்யப்பட்ட சிக்கன் அல்லது மீன் + காய்கறி+ பாசிப்பருப்பு தோசை உடன் வெஜிடபிள் சூப் + காய்கறி அல்லது 2-3 முட்டையின் வெள்ளை கரு + 1 சப்பாத்தி/கோதுமை பிரட். இரவில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது தசைகளின் சீரமைப்புக்கு உதவுகிறது. இது இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும் இது போன்ற உணவுகளை சாப்பிடும் பொழுது இரவில் அடிக்கடி பசி எடுக்காது.
இரவு உணவிற்கு பிறகு கிரீன் டீயை எடுத்துக் கொள்ளலாம். இதில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக சுத்தமான தேனை பயன்படுத்தவும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 5 விஷயங்களை செய்தால் போதும், ஒரே வாரத்தில் ஒல்லியாகலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com