வீடு மற்றும் அலுவலக பொறுப்பில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது, தன்னை கவனித்துக் கொள்ள முடியாமல் பல பெண்களும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் உடற்பயிற்சி செய்ய தவறும்பொழுது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகலாம். உடல் எடை அதிகரிக்கும்பொழுது உடலின் பகுதிகளான கை, கழுத்து, முகம், வயிறு, தொடை போன்ற பகுதிகளில் கொழுப்பு அதிகமாக சேர்கிறது.
இதனால் உடலாலும் மனதாலும் பல வித பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கிறார்கள். அதிலும் கேலிகளுக்கு உண்டாகும் பொழுது உடல் எடையை கட்டாயமாக குறைத்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும், சோம்பல், வேலைப்பளு, நேரமின்மை போன்ற பல காரணங்களால் உங்கள் இலக்கை அடைய முடியாமல் போயிருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கல் நீங்கி வயிறு சுத்தமாக இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்!
ஆனால் நீங்கள் விரும்பினால் மன உறுதியுடன் செயல்பட்டால் வெறும் இரண்டு வாரங்களில் 10 கிலோ வரை உங்களுடைய உடல் எடையை குறைக்கலாம். ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை வீட்டிலிருந்து செய்தால் போதும். இதனுடன் ஆரோக்கியமான சீரான உணவையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
சுறுசுறுப்பாக இருப்பது உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் முக்கியம். இதனுடன் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது என ஊட்டச்சத்து நிபுணரான இட்டு சாப்ரா அவர்கள் தெரிவித்துள்ளார். பல நிறங்களைக் கொண்ட சத்தான உணவுகளை சாப்பிடும் பொழுது உடல் எடையை குறைப்பது சுலபமாகும். இதனுடன் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட்டால் போதும் உங்கள் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.
இதுபோன்று சத்தான உணவுகள் நிறைந்த டயட் பிளான் ஒன்றை நிபுணர் பகிர்ந்து உள்ளார். இந்த டயட் பிளான் மூலம் இரண்டு வாரங்களில் 7-10 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் வெந்நீருடன் உங்களுடைய நாளை தொடங்குங்கள். இது உங்களுடைய உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். வெந்தயம் மற்றும் இஞ்சியை கொண்டு தயாரிக்கும் பானத்தை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கான செய்முறையை இப்போது பார்ப்போம்
உங்கள் மதிய உணவில் சாலட்களை சேர்த்துக் கொள்ளவும். வண்ணமயமான இந்த காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றன.
ஒரு நாளைக்கு மூன்று முறை கிரீன் டீ அல்லது மசாலா டீ குடிக்கலாம். இது உங்களுடைய வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்புக்கு உதவும்.
இந்த டயட் பிளானை கடைபிடிக்கும் பொழுது குறைந்தது ஒரு மணி நேரமாவது காலையிலும் மாலையிலும் நடை பயிற்சி செய்ய வேண்டும். தினமும் 30 நிமிட விரைவிருப்பான நடை பயிற்சி செய்தால் 150 கலோரிகள் வரை எடையை குறைக்கலாம். சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுகளுடன் உங்கள் எடையை விரைவில் குறைப்பது சாத்தியமே!
இந்த பதிவும் உதவலாம்: இரவு தூங்குவதற்கு முன் தொப்புளில் ஒரு துளி மஞ்சள் தடவினால் இவ்வளவு நன்மைகளா!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com