இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நம் உணவுமுறை எந்த அளவுக்கு முக்கியமோ அதே போல நாம் உட்கொள்ளும் ஸ்னாக்ஸ் வகைகளும் முக்கியம். ஒரு சிலருக்கு மாலையில் பசி எடுத்தால் சமோசா, பீட்சா, பர்கர் போன்ற ஸ்னாக்ஸ் வகை உணவுகளை சாப்பிடுவார்கள். இது போல ப்ராஸஸ்ட் உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் அது நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக் கூடும். ஆரோக்கியமான உணவு முறையை பழக்கப்படுத்தினால் போதும் பல நோய்களை தவிர்க்கலாம். நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில நட்ஸ் வகைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் எடை குறைய பாதாம் பெரிதும் உதவுகிறது. உங்கள் தினசரி உணவில் பாதாமை சேர்ப்பது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். பாதாம் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது. நீங்கள் சாப்பிடும் பாதாம் பருப்பின் அளவை அதிகரிப்பதன் மூலம் உங்கள் கெட்ட கொழுப்பு அளவை இன்னும் அதிகமாக குறைக்கலாம். இந்த பாதாமை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு அபாயத்தை குறைக்க உதவும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் உங்கள் தினசரி உணவில் பாதாம் சேர்த்துக் கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும்.
மேலும் படிக்க: கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இந்த பழங்களை சாப்பிடுங்க !
ஒரு நாளைக்கு 84 கிராம் அல்லது மூன்று பாதாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்புகளும் குறையும் என்று கூறப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பாதாம் சாப்பிடுபவர்களின் கொலஸ்ட்ரால் அளவு குறைந்துள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆறு வாரங்களில் பாதாம் பருப்பு உட்கொண்டவர்கள் சராசரியாக 5 எம்ஜி அளவு கெட்ட கொழுப்பை குறைத்துள்ளனர். அவர்களுக்கு தொப்பை மற்றும் கால் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்ததாக கூறப்படுகிறது. நீங்கள் உங்கள் இடுப்பு பகுதி கொழுப்பை குறைக்க விரும்பினால் தினசரி உணவில் சிறிது பாதாமை சேர்த்துக் கொள்வது அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது . பல விதமான இதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணம் இந்த மன அழுத்தம் தான். உங்கள் தினசரி உணவில் பிஸ்தாவை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மனநிலை சமமாகி இதய ஆரோக்கியம் மேம்படும். ஒரு நாளைக்கு சுமார் மூன்று அல்லது நான்கு பிஸ்தா சாப்பிட்ட மன உளைச்சலுக்கு ஆளான மக்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில், பிஸ்தா சாப்பிடாதவர்களை காட்டிலும் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. சர்க்கரை நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து நீரிழிவு நோயின் அபாயம் குறைய உதவுகிறது.
2014 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில், தினமும் சுமார் 6 முதல் 10 கிராம் பிஸ்தா நிறைந்த உணவை சாப்பிட்ட சர்க்கரை நோயாளிகள் நான்கு வாரத்திற்கு பிறகு மன அழுத்தத்தில் இருந்து குணமாகி அவர்களின் இதய ஆரோக்கியம் மேம்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது. உங்கள் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைக்கவும் மன அழுத்தத்தை குணமாக்கவும் அல்லது கெட்ட கொழுப்பை குறைக்கவும் தினசரி உணவில் பிஸ்தாவை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
வால்நட்ஸ் பருப்பு வகையில் 47% கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது நல்ல கொழுப்புகள் என்று கூறப்படுகிறது. உங்கள் தினசரி உணவு முறையில் வால்நட்ஸ் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இரத்த நாளங்களின் செயல்பாடும் மேம்பட உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் தினசரி உணவில் ஐந்து அல்லது ஆறு வால்நட்ஸ் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதனை அளவாக சாப்பிடுவது மிகவும் அவசியம். இந்த நட்ஸ் வகைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த நட்ஸ் வகைகளை சாப்பிடுவதற்கு சரியான நேரம் என ஒன்று கிடையாது. எனவே நட்ஸ் சாப்பிடும் போது அளவாக சாப்பிடுங்கள். சிலருக்கு இந்த நட்ஸ் வகைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தோல் அலர்ஜிகள் ஏற்படலாம். அப்படி அலர்ஜிகள் ஏற்படும் போது அருகில் உள்ள மருத்துவரை அணுகுவது அல்லது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com