கோடை காலத்தில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பழங்கள் காய்கறிகள் மூலம் உட்கொள்வது அவசியம். கொளுத்தும் வெயிலுக்கு நம் உடலுக்கு நார்ச்சத்து அதிகம் தேவை. இந்த நார்ச்சத்து பெரும்பாலும் பழங்களில் நிறைந்துள்ளது. நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமின்றி குளிர்ச்சியையும் சில பழங்கள் நமக்கு தருகின்றன. அதனால் கோடைகாலத்திற்கு ஏற்ற பழங்களை சாப்பிட்டு இந்த சம்மரை அழகாக சமாளிக்கலாம். கொளுத்தும் வெயிலை சமாளிக்க உதவும் பழங்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி, இது எப்பொழுதும் கிடைக்கும் ஒரு பழ வகை. இந்த பழத்தை இந்த கோடைக் காலத்தில் சாப்பிடுவதன் மூலம் நமது உடம்பில் உள்ள தோல் பாதிக்காமல் இருக்கும். ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இது புற்றுநோயை எதிர்க்கும் பண்பு கொண்டுள்ளது. இந்த பழம் நமது உடம்பில் உள்ள ஹார்மோன்களுக்கும், எலும்புகளுக்கும் நன்மையளிக்கும். இதில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
மேலும் படிக்க:பெண்களின் எடை இழப்பிற்கு உதவும் பப்பாளி பழம்!
இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ராலை தவிர்க்க முடியும். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வழி வகுக்கும். ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை தடுக்க உதவும். இந்த பழத்தில் விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு பழம் ஆப்பிள்.
திராட்சை பழம் கண் பார்வைக்கும் கண்களுக்கும் நல்லது. மைக்ரேன் பிரச்சினை உள்ளவர்கள் திராட்சை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் குணமாகும். ஆஸ்துமா மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிறந்த பழம் இந்த திராட்சை. இதில் விட்டமின் சி மற்றும் வைட்டமின் கே உள்ளது. கொலஸ்ட்ரால் மற்றும் குடல் பிரச்சினை உள்ளவர்கள் இந்த பழத்தை உணவில் சேர்த்து சாப்பிடலாம். சுத்தம் செய்யப்பட்ட திராட்சைகளை யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கோடைகாலத்திற்கு ஏற்ற அடுத்த பழம் ஆரஞ்சு. புற்றுநோய், சிறுநீரகம் சார்ந்த நோய்கள், லிவர் கேன்சர் போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. தோல், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கும் பலன் தரும் பழமாக இது உள்ளது. இதில் விட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பெக்டின் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் சில ஆரஞ்சு சுளைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியம் பெற முடியும்.
நீரிழிவு நோயாளிகள் இதனை விரும்பி சாப்பிடலாம். இந்த கொய்யா பழம் ஹார்மோனலின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை தினசரி உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும் இந்த பழத்தில் கலோரிகள் மிக குறைவு என்பதால் உடல் எடை குறைய பெரிதும் உதவுகிறது.
கோடை காலம் என்று சொன்னாலே பலருக்கும் தர்ப்பூசணி நினைவுக்கு வரும். இது நம் எலும்புகளுக்கு நல்லது. இதில் பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் அடங்கியுள்ளன. இந்த பழத்தில் தண்ணீர் சத்து அதிகளவில் உள்ளது. உஷ்ணமான நேரத்திலும், தாகமான நேரத்திலும் தர்பூசணி துண்டுகளை அப்படியே சாப்பிடலாம்.
கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் ஒரு பழம் இது. இந்த பழத்தில் உள்ள வைட்டமின்ஸ், மினரல்ஸ், புரோபயட்டிக், நார்ச்சத்து போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. உணவு சாப்பிட்டவுடன் சிறிது நேரம் கழித்து இந்த பழத்தை சாப்பிட்டால் எளிதில் உணவு செரிமானமாக உதவுகின்றது. மேலும் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்பு உருவாக உதவுகிறது. இப்பழத்தில் வைட்டமின் ஏ அதிகளவில் உள்ளதால் கண்களுக்கு நல்ல பலனைத் தரும். மேலும் இது பெண்கள் மற்றம் ஆண்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com