குழந்தை பிரசவித்த பிறகு பெண்ணின் உடலிலும், வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் பெண்ணின் அழகு குறைந்துவிடும் என கருதுகின்றனர். குழந்தை பிரசவித்ததும் முடி உதிர்வு அதிகமாகும், அடிக்கடி கொட்டும், தூங்கி எழுந்த பிறகு தலையணைக்கு அடியில் முடியை காண முடியும். முதல் குழந்தை பெற்றெடுத்தவுடன் நீங்களும் முடி உதிர்வு பிரச்னையை எதிர்கொண்டால் பதற்றம் அடைய தேவையில்லை. இதை எளிதில் சரி செய்ய முடியும். முடி உதிர்வு தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணரிடம் பெற்ற தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.
குழந்தை பிறந்தவுடன் முடி உதிர்வு ஏன் ?
குழந்தை பிரசவித்த பிறகு பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறைந்துவிடுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பதால் முடி வேகமாக வளருவது போல் தோன்றும். முடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் தோன்றும். ஆனால் குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு இயல்பு நிலைக்கு திரும்பும். ஈஸ்ட்ரோஜன் அளவு ஏறுமுகத்தில் இருந்து சரிவதால் முடி கொட்டுகிறது. இது குழந்தை பிரசவித்த இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு நடக்கும். முடி உதிர்வு பெரும் பிரச்னையல்ல. இதை சரி செய்வதற்கு சிறப்பு பானம் ஒன்றை குடித்தால் போதும்.
தலைமுடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய் ஜூஸ்
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ் உடலில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும், மயிர்க்கால்களையும் வலுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ் தலைமுடி சேதத்தை தடுக்கும். அதே நேரத்தில் பொடுகு தொல்லை, தலை அரிப்பில் இருந்தும் விடுபடலாம். நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக்கும். இது தலைமுடிக்கு தேவையான இரும்புச்சத்து கிடைப்பதை உறுதி செய்யும்.
நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் பழக்கம்
ஒரு நாள் மட்டும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்துவிட்டு முடி வளரவில்லை என கூறக்கூடாது. தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். கசப்புத்தன்மை தவிர்க்க நெல்லிக்காய் ஜூஸ் தேன் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம். இதை முறையாக செய்தால் இழந்த தலைமுடி மீண்டும் பெறத் தொடங்குவீர்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation