
உடல் எடையைக் குறைத்தாலும், தொப்பையைக் குறைப்பது சற்று சவாலாக இருக்கலாம். குறிப்பாக அடிவயிற்றில் பகுதியில் தேங்கியுள்ள பிடிவாதமான கொழுப்புகளை எரிக்கக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கலாம். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் குறைந்த உடல் செயல்பாடு, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் தொப்பை போடலாம்.
அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகமாக சேரும்பொழுது ஆஸ்துமா உயர் இரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய், பக்கவாதம், இதய நோய்கள், மார்பகப் புற்றுநோய் போன்ற பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இதுபோன்று தீவிர உடல்நல பிரச்சனைகளை தடுக்க தொப்பையைக் குறைக்க வேண்டியது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்: இரவு பாலில் நெய் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
தொப்பையைக் குறைக்க மணிக் கணக்கில் உடற்பயிற்சி செய்தும் பயன் தரவில்லையா? உங்களுடைய டயட்டில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உடற்பயிற்சியுடன் சரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே சிறந்த விளைவுகளைப் பெற முடியும். சரியான உணவுகளைச் சாப்பிடுவது எடை இழப்பை எளிதாக்கும் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.
Women's Diet to Lose Belly Fat : தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகளை ஊட்டச்சத்து நிபுணரான ஏத்தா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம். நிபுணரின் கருத்துப்படி தொப்பையைக் குறைக்க முயற்சி செய்யும்பொழுது புரதம், நார்ச்சத்து, நல்ல கார்போஹைட்ரேட் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் வயிற்றுப் பொருமலால் தொப்பை கொழுப்பு சேர்கிறது. ஆனால், வயிற்றுப் பொருமலும் தொப்பையும் வேறுபட்டவை. மிதமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் பொருமலை குறைக்கலாம். வயிற்றுப் பொருமலால் நெஞ்செரிச்சல், அசௌகரியம், வாயு, வயிறு நிரம்பிய உணர்வு போன்ற அறிகுறிகளை உணரலாம். இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அதிக நார்ச்சத்து, வாயுவை உண்டாக்கும் உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகிறது. வயிற்றுப் பொருமலை குறைக்க பின்வரும் உணவு மற்றும் பானங்களை நிபுணர் பரிந்துரை செய்கிறார்.
தொப்பையை குறைக்க அதிக நேரம் எடுக்கலாம். இது நபருக்கு நபர் மாறுபடும். எடை இழப்பை பொறுத்த வரை, எல்லோருக்கும் ஒரே மாதிரியான விளைவுகள் இருக்காது. எனவே உங்களுக்கு பொருந்தக்கூடிய உணவுகள் அல்லது வழக்கத்தை பின்பற்றங்கள். இதற்கு மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையையும் பெறலாம். உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைக்க ஈஸியான வழி, இளநீர் குடியுங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com