இட்லி சாப்பிட்டே எடையைக் குறைக்கலாம்; எத்தனை இட்லி சாப்பிடணும் தெரியுமா ?

உடல் எடையைக் குறைப்பதற்கு இட்லி எவ்வாறு உதவும் ? இட்லி சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்க முடியுமா போன்ற கேள்விகளுக்கு இங்கே பதில்கள் காணலாம். இட்லி பெரும்பாலான தமிழர்களின் காலை உணவாக இருக்கிறது.
image

காலையில் 8 மணி ஆகிவிட்டால் எல்லோருடைய தட்டிலும் சுட சுட ஆவி பறக்க 3-4 இட்லி சாம்பார், சட்னியுடன் இருக்கும். பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இட்லி தமிழர்களின் காலை உணவுமுறையில் தவிர்க்க முடியாக உணவாக விளங்குகிறது. பஞ்சு போன்ற இட்லி நம்முடைய குடலுக்கு மிகவும் நல்லது. எளிதில் செரிமானம் ஆகிவிடும். காலையில் நாம் சாப்பிடும் உணவே அன்று முழுவதும் நம் உடலுக்கு தேவையான சக்தியை பாதியளவு கொடுத்துவிடும். காலையில் நாம் சாப்பிடும் 3-4 இட்லிகளில் போதுமான சத்து கிடைக்குமா ? இட்லி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா ? இட்லியின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன போன்றவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

weight loss with idli

இட்லியின் ஊட்டச்சத்து

உளுத்தம் பருப்பு, அரிசி பயன்படுத்தி இட்லி தயாரிக்கப்படுகிறது. ஒரு இட்லியின் எடை 50 கிராம் என்ற அளவில் அதன் ஊட்டச்சத்து மதிப்பை கணக்கிடலாம். 50 கிராம் இட்லியில் 50 கலோரிகள், புரதம் 2 கிராம், 10 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு .5 கிராம், கால்சியம் 15 மில்லி கிராம், இரும்புச்சத்து 0.7 மில்லி கிராம், மெக்னீசியம் 9 மில்லி கிராம், பாஸ்பரஸ் 20 மில்லி கிராம், பொட்டாசியம் 23 மில்லி கிராம், சோடியம் 130 மில்லி கிராம் உள்ளது. உளுத்தம் பருப்பில் உள்ள புரதச்சத்து இட்லியில் நமக்கு அப்படியே கிடைக்கிறது.

எடை இழப்புக்கு இட்லி சாப்பிடுங்க

இட்லியில் குறைவான கலோரி

சராசரியாக ஒரு இட்லியில் 50-70 கலோரிகள் உண்டு. சிலர் இட்லியில் தானியங்களும் சேர்க்கின்றனர். இதனால் இட்லியின் கலோரி அளவு 100 ஆக அதிகரிக்கலாம். 3 இட்லி சாப்பிட்டாலே 300 கலோரி வரை கிடைக்கும். பிற காலை உணவுகளை விட இட்லியில் கலோரி குறைவு என்பதால் எடை இழப்புக்கு இதை சாப்பிடலாம்.

குறைந்த கொழுப்பு

எண்ணெய் இன்றி வேகவைத்து சாப்பிடும் இட்லியில் கொழுப்பு மிக மிக குறைவு. கொழுப்பு இல்லாத உணவு சாப்பிட விரும்புவோருக்கு இட்லி சரியான தேர்வாகும்.

இட்லியின் புரத அளவு

பருப்பு பயன்படுத்தி இட்லி தயாரிப்பதால் புரதச்சத்தும் நமக்கு கிடைக்கிறது. இட்லியை நாம் வெறுமனே சாப்பிடுவது கிடையாது. சாம்பார் தொட்டு சாப்பிட்டால் அதில் உள்ள பருப்பு மூலமாகவும் புரதச்சத்து கிடைக்கிறது.

சமச்சீர் உணவு

இட்லியுடன் தொட்டு சாப்பிடும் சாம்பாரில் பருப்பு, காய்கறிகள், நெய் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் இட்லியை சமச்சீரான உணவாக மாற்றுகின்றன. இட்லியில் புரதமும், நார்ச்சத்தும் கிடைப்பதால் நம்முடைய வயிறு நீண்ட நேரம் முழுமையாக உணரும்.

மேலும் படிங்க மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு நல்ல விஷயங்களா ? ஆரோக்கிய நன்மைகளை தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

மாவு புளித்தால் தான் இட்லி கிடைக்கிறது. இதனால் இட்லி ப்ரோபயாட்டிக் உணவாக மாறுகிறது. செரிமானப் பிரச்னைகளை தவிர்க்க இட்லி சாப்பிடுவது நல்லது.

ரவை இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி, பாசிப்பருப்பு இட்லி என இட்லியுடன் சிலவற்றை சேர்த்து அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரித்து போதுமான அளவில் சாப்பிட்டால் விரைவாகவே உடல் எடையைக் குறைக்க முடியும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP