பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளுக்கு டீ, காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அது அவர்கள் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது . நம்மில் பலருக்கும் டீ காபி குடிப்பது அன்றாட வாழ்க்கை பழக்கமாக மாறிவிட்டது. நாம் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி அல்லது டீ வைத்து தான் அந்த நாளை துவங்குகிறோம். ஆனால் இந்த டீ காபி அதிகமாக குடித்தால் நம் உடலுக்கு பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஒரு சிறந்த தேநீர் தான் இந்த இலவங்கபட்டை டீ. இந்த லவங்கப்பட்டை டீயில் உள்ள அற்புதமான மசாலா நம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இந்த தேநீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் வீக்கத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. மசாலா பொருளாக நம் தினசரி சமையலில் சேர்க்கும் இந்த லவங்கப்பட்டை சர்க்கரை நோயாளிகளுக்கு எப்படி எல்லாம் உதவுகிறது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
லவங்கப்பட்டையில் இரும்பு சத்து, கார்போஹைட்ரேட், புரதம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், கால்சியம், வைட்டமின்கள் போன்ற நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அதிக அளவு நிறைந்துள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த லவங்கப்பட்டை நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. இன்சுலின் சுரப்பை இந்த லவங்கப்பட்டை ஊக்குவிப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சர்க்கரை நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் தாராளமாக இந்த லவங்கப்பட்டை தேநீரை தினமும் குடித்து வரலாம். அதேப் போல உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும் இந்த லவங்கப்பட்டையை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
லவங்கப்பட்டையின் நன்மைகள்:
இந்த லவங்கப்பட்டையை சமைத்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். இதனால் சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் நாளடைவில் குணமாகும். மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த லவங்க பட்டை பெரிதும் உதவுகிறது. மேலும் பல் வலி, பல் ஈறுகளில் வலி இதுபோன்ற பிரச்சனைகளில் அவதிப்படுபவர்களும் மற்றும் வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்களும் இந்த லவங்கப்பட்டையை உணவில் சேர்த்தோ அல்லது லவங்கப்பட்டை தேநீர் செய்தோ சாப்பிட்டு வரலாம்.
மேலும் படிக்க: உடல் எடை குறைக்க உதவும் சியா விதைகள்!
லவங்கப்பட்டை டீ செய்வது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு லவங்கப்பட்டையும் இஞ்சியையும் இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இது நன்றாக கொதிக்கும் போது சிறிது அளவு கிரீன் டீ சேர்த்து கொதிக்க விடுங்கள். சிறிது நேரம் கழித்து அடுப்பை நிறுத்தி இறக்கி வைக்க வேண்டும். இப்போது இதனை வடிகட்டி ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இல்லையென்றால் எழுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் கூட நல்ல பலன் கிடைக்கும். இந்த லவங்கப்பட்டை டீ சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.
உடல் எடை குறையும்:
இந்த லவங்கப்பட்டையில் அதிக அளவு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் நம் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் குடிக்கும் தண்ணீரில் இந்த பட்டையை போட்டு சிறிது நேரம் ஊற வைத்து குடித்து வரலாம் அல்லது ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு லவங்கப்பட்டை துண்டுகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் குடித்து வரலாம். இந்த லவங்கப்பட்டை தண்ணீரை தினசரி குடித்து வந்தால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் சுத்தமாகும். இதனால் நாளடைவில் உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.
சரும பொலிவு:
உடல் எடை குறைக்க மட்டுமின்றி சருமப்பொலிவை அதிகரிக்கவும் இந்த லவங்கப்பட்டை பயன்படுத்தப்படுகிறது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் பட்டை தூள், சிறிதளவு தேன் இரண்டையும் கலந்து தினசரி குடித்து வந்தால் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிக்கலாம்.
மாதவிடாய் வலி குறையும்:
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறைய இந்த லவங்கப்பட்டை டீயை குடித்து வரலாம். பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உடல் சோர்வு, கை கால் வலி, குமட்டல் போன்ற பிரச்சனைகளும் இந்த டீ குடித்து வந்தால் நீங்கும். அதே போல நம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் இந்த லவங்கப்பட்டை டீ உதவுகிறது.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation