Chia Seeds For Weightloss: உடல் எடை குறைக்க உதவும் சியா விதைகள்!

சியா விதைகள் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

chia seeds for weightloss
chia seeds for weightloss

உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு இந்த சியா விதைகள் ஒரு சிறந்த மருந்து. சியா விதைகள் நம் உடலுக்கு ஒரு சூப்பர்ஃபுட் போன்றவை என்று கூறப்படுகிறது. இது தாவரங்களிலிருந்து வரும் ஒரு சிறப்பு வகையான புரத சத்தைக் கொண்டுள்ளது. இந்த புரதம் நம் உடலில் உள்ள தசைகள் பெரிதாகவும் வலுவாகவும் வளர உதவுகிறது. சியா விதைகள் நமது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்த சியா விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடல் சரியாக வேலை செய்ய மிகவும் முக்கியம். சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் நம் உடல் கொழுப்பை அகற்றவும் உதவுகின்றன. உடல் எடை குறைக்க சியா விதைகள் எப்படி உதவும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அதிக புரதம்:

இதில் உள்ள புரதம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனென்றால் அது நம்மை நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர வைக்கிறது. எனவே நாம் அடிக்கடி பசி எடுத்து அதிகம் சாப்பிட தேவையில்லை. அதாவது குறைவான உணவை உட்கொண்டு நீங்கள் திருப்தியாக இருக்கலாம்.

அதிக நார்ச்சத்து:

chia seeds royalty free image

முட்டை, சிக்கன், மட்டன் போன்ற உணவுகளில் இருக்கும் நார்ச்சத்தை விட, இந்த சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உங்கள் தினசரி உணவில் சியா விதைகளை சேர்த்து சாப்பிடுவது உடல் எடையை குறைக்கவும், உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். அதே போல உங்கள் உடல் உணவில் இருந்து அதிக கொழுப்பு சேமித்து வைப்பதை தடுக்கவும் உதவும். இந்த சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து நமது வயிற்றில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

மேலும் படிக்க: பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!

சியா விதைகளை சாப்பிடுவது எப்படி?

siyavithai

உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிராம் அல்லது இரண்டு வேளைகளில் 10 கிராம் சியா விதைகள் சாப்பிடலாம். இந்த சியா விதைகளை தினமும் காலையில் ஒரு கிளாஸ் சூடு தண்ணீரில் சேர்த்து குடித்து வரலாம். தினமும் நாம் குடிக்கும் தண்ணீர் பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் சியா விதைகளை சேர்த்து கொள்ளலாம். அதே போல இந்த சியா விதைகளை இரவு முழுக்க தண்ணீரில் ஊறவைத்து பழங்கள் அல்லது மில்க்ஷேக் உடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். பழங்கள் மட்டும் இல்லாமல் காய்கறி சாலட்களில் கூட இந்த சியா விதைகளை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP