பழங்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரம் ஆகும். ஒரு நாளைக்கு இரண்டு முறை ஃபிரெஷ் ஆன பழங்களை சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
பழங்கள் எடை இழப்புக்கு உதவுகின்றன. இவை உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன. ஆனால் பழங்களின் நன்மைகளைப் பெற அதை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் பழங்களின் அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
"பழங்கள் நிச்சயமாக ஜங்க் உணவுகளை விட ஆரோக்கியமானவை ஆனால் அவை நீண்ட காலத்திற்கு அல்ல" என ஆயுர்வேத மருத்துவர் வரலக்ஷ்மி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதற்கான விளக்கத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கூறியுள்ளார். பழங்களை ஏன் மாலை வேலையில் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணத்தை நிபுணரிடம் இருந்து தெரிந்துகொள்வோம்.
ஆயுர்வேதத்தின்படி சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பழங்களை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் பழங்கள் மிதமானதாகவே இருந்தாலும், அவை குளிர்ச்சி தன்மை உடையதாகவும் இருக்கலாம். பெரும்பாலான பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை உடையதாக இருக்கும். மாலை 4 மணிக்கு மேல் இவற்றை சாப்பிடும்போது, பழங்களின் குளிர் மற்றும் மிதமான இயல்புக்கு ஏற்ப அவை வதா மற்றும் கபாவைத் தூண்டுகின்றன.
ஆயுர்வேதத்தின் படி, மாலையில் பழங்களை சாப்பிடுவது தூங்கும் நேரம் மற்றும் செரிமான செயல்முறையை சீர்குலைக்கலாம். பெரும்பாலான பழங்களில் உள்ள எளிய கார்போஹைட்ரேட்டுகள் உடனடி ஆற்றலை தருகின்றன. மேலும் ஒரு சில பழங்கள் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கலாம். இந்நிலையில் தூங்கும் நேரத்துக்கு மிக அருகில் பழங்களை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவை உங்கள் தூக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தலாம். மேலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நமது வளர்சிதை மாற்றம் குறைவதால் கார்போஹைட்ரேட்டுகளை ஜீரணிக்க கடினமாக இருக்கும். ஆகையால் மாலை வேலையில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை அளவோடு எடுத்துகொள்வது நல்லது.
பழங்களை எப்பொழுதும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை பால் அல்லது காய்கறிகளுடன் கலந்து சாப்பிடக்கூடாது. இவ்வாறு சாப்பிடுவதால் உடலில் நச்சுக்கள் உருவாகலாம். பழங்களின் முறையற்ற செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களின் குறைவான உறிஞ்சுதல் காரணமாக இது போன்ற நிலை உருவாகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுக்களால் நோய் அல்லது பிற உடல்நலக் குறைபாடுகளும் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பாகற்காயின் பக்க விளைவுகள்
காலையில் வெறும் வயிற்றில் பழம் சாப்பிடுவதே சிறந்தது. 10 மணி நேர இரவு தூக்கத்திற்கு பிறகு வயிறு முற்றிலும் காலியாக இருக்கும். எனவே ஆரோக்கியமான உணவுகளை காலையில் சாப்பிடுவது ஊட்டச்சத்துக்களை திறம்பட உறுஞ்சுவதற்கும், வளர்சிதை மாற்றத்தைத் தொடங்குவதற்கும் உதவியாக இருக்கும். உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் மற்றும் காலையிலும் எளிய கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவது நல்லது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு குறைந்த கொழுப்புகள், புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ள உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.
இனி பழங்களை சாப்பிடும் போது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை மனதில் வைத்து கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: சுரைக்காய் நன்மைகளுக்கு இணையாக தீமைகளும் செய்யும்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com