பாகற்காய் அதிக கசப்பு சுவை உடையது, இது உடல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக பாகற்காயை சாப்பிடுவது உடல் நலத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதை தினமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். பாகற்காயை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இப்பதிவில் படித்தறிந்து பயன்பெறுங்கள்.
புகழ்பெற்ற உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான சிக்கா அகர்வால் அவர்களிடம் இருந்து இதைப்பற்றி தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது அவை தீங்கு விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உணவின் முழு நன்மையையும் பெற அதை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் பாகற்காயின் பக்க விளைவுகளையும், எவ்வளவு பாகற்காயே எடுத்துக் கொள்வது சரி என்பதை பற்றியும் நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
பாகற்காய் ஜூஸை அதிகமாக குடிப்பதால் மாதவிடாய் உதிரப்போக்கு கணிசமாக அதிகரிக்கிறது. அதேசமயம் கர்ப்ப காலத்தில் பாகற்காயை அதிகம் எடுத்துக் கொள்வதால் கருச்சிதைவு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அடிக்கடி பாகற்காயை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கர்ப்ப கால சர்க்கரை நோய் போன்ற ஏதேனும் காரணத்திற்காக பாகற்காயை எடுத்துக் கொள்ள விரும்பினால், மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு குறைந்த அளவுகளில் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் மருத்துவரின் பரிந்துரைப்படி உணவுகள் மற்றும் மாத்திரைகளை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்வது நல்லது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் பாகற்காய் ஜூஸ்சி குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தினசரி பாகற்காய் ஜூஸ் குடிப்பது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம், ஆனால் இது கல்லீரலை பாதிக்க்கூடும். அளவுக்கு அதிகமாக பாகற்காயை எடுத்துக் கொள்வதால் கல்லீரல் சேதமடையலாம். பாகற்காயில் உள்ள லெக்டின் எனும் புரதம் கல்லீரலில் நொதிகளின் அளவை அதிகரிக்கிறது. இக்காரணத்தினால் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்நிலையில் தினசரி பாகற்காய் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் பாகற்காய் ஜூஸை தவிர்த்திடுங்கள்.
பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் குறைந்த இரத்த சர்க்கரை உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை மேலும் குறைக்கலாம்.
அடிக்கடி பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. சில சமயங்களில் அதிக கசப்பு சுவை உடைய பாகற்காய் ஜூஸ் குடிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கலாம். இருப்பினும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், சர்க்கரை நோயாளிகள் இதை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் தலை வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதேசமயம் சிறுபிள்ளைகளுக்கும் அதிகமாக பாகற்காய் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோய்க்கு சியா விதைகள் நல்லதா?
பாகற்காயை அதிகம் எடுத்துக் கொள்வதால் வயிற்று வலி உண்டாகும் வாய்ப்பு உள்ளது. நிபுணரின் கருத்துப்படி அளவுக்கு அதிகமாக பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
பாகற்காய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. இருப்பினும் ஆரோக்கியமான விஷயத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அளவோடு சாப்பிட்டு பாகற்காயின் நன்மைகளை முழுவதுமாக பெற்றிடுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டிய இரத்த பரிசோதனைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com