உணவியல் நிபுணர் கவிதா தேவ்கன் இதை பற்றி என்ன கூறுகிறார் என்று கேட்போம்.வெயில் காலத்தில், பழங்களின் ராஜாவான மாம்பழத்தை நாம் பல விதமான வகைகளில் கடைகளில் காணலாம். ஒவ்வொரு மாங்காய்க்கும் தனியாக சுவை உள்ளது. பழுத்த மாம்பழம் மட்டும் இல்லாமல் பச்சை மாங்காயும் கடைகளில் கிடைக்கும். பெரும்பாலும் பச்சை மாங்காய் ஊறுகாய் மற்றும் பச்சடி செய்ய பயன்படுத்தப்படும். இதன் சுவை புளிப்பு என்றாலும் இது உடலுக்கு பல நன்மைகள் தருகிறது.
உணவியல் நிபுணர் கவிதா தேவ்கன் அவர்களை பொறுத்தவரை, வெயில் காலத்தில் பச்சை மாங்காய் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இவர் கூறுவது, 'மாங்காயில் வைட்டமின் C சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் உட்கொண்டு வர நம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் உடலின் நீர்ச்சத்தினை தக்க வைத்துக் கொள்ளும். உடல் சூட்டினால் ஏற்படும் நீர்க்குத்தலை தீர்க்கும். கவிதா தேவ்கன் மேலும் பல குறிப்புகளை நமக்கு கூறுகிறார்.
இதுவும் உதவலாம்:உடல் எடையை குறைக்க பச்சைப் பயிரை எவ்வாறு பயன்படுத்துவது?
மாம்பழத்தை விட மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் இதில் சர்க்கரை அளவும் குறைந்து இருக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் கொழுப்பை குறைக்க வல்லது. இதை தினமும் சிறிய அளவில் உண்டு வந்தால் உடல் எடை தானாக குறையும்
உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அல்லது செரிமான பிரச்சினை இருந்தாலும், மாங்காயை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி விடும். மாங்காய் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. உணவியல் நிபுணர் கவிதா தேவ்கன் கூறுகிறார், 'கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் காலை சோர்வு ஆகியவை மாங்காய் சாப்பிட சரியாகி விடும்'
குறிப்பு: அளவாக சாப்பிட வேண்டும்
வைட்டமின் A மற்றும் வைட்டமின் C சத்துடன் சேர்ந்து மக்னீசியம் சத்து இதில் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றம் செய்கிறது. இதனால் நம் சருமம் மற்றும் தலைமுடிக்கு நன்மை விளைகிறது. இரண்டையுமே பளபளப்பாக மாற்றுகிறது
பச்சை மாம்பழம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. கவிதா தேவ்கன் கூறுகையில், 'வைட்டமின்-பி-3 மிகக் குறைவான உணவுப் பொருட்களிலேயே உள்ளது. அதில் பச்சை மாம்பழமும் ஒன்று. இது நிசின் என்றும் அழைக்கப்படுகிறது. இதய பிரச்சனைகளை நீக்குவதில் இது மிகவும் பயனுள்ள உறுப்பு. இதய நோய் உள்ளவர்கள் தினமும் மாம்பழத்தை பச்சையாக சாப்பிட வேண்டும்.
மாங்காயில் கால்சியம் அதிகம் உள்ளது. இது உங்கள் பற்களை வலுவாக்கும். ஈறுகளில் இருந்து ரத்தம் கசிந்தால், பச்சையாக சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை நீங்கும். மேலும், உங்கள் பற்களில் ஒரு பளபளப்பை உருவாக்கும். பற்களின் வலிமைக்கு பச்சை மாங்காய் துண்டுகளை மென்று சாப்பிடலாம்.
இதுவும் உதவலாம்:அரிசி உணவுகள் எடை இழப்புக்கு உதவுமா?
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடுதொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com