Hibiscus Tea Benefits: செம்பருத்தி டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

செம்பருத்தி டீயின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

hibiscus tea
hibiscus tea

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல புதிய உணவு முறைகளை ட்ரை செய்து வருகின்றனர். குறிப்பாக தாங்கள் உட்கொள்ளும் உணவிலும் மிகவும் கவனமாக இருந்து ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை மட்டுமே சாப்பிட தொடங்கியுள்ளனர். அதில் தினசரி குடிக்கும் டீக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.காலம் காலமாக பால் டீ மட்டுமே குடித்து வந்த மக்கள் கடந்த சில காலங்களாக பிளாக் டீ, கிரீன் டீ, ப்ளூ டீ போன்ற புதிய ஆரோக்கியமான டீ வகைகளை குடிக்க துவங்கிவிட்டனர். அந்த வரிசையில் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் இன்னொரு வகையான ஆரோக்கியமான தேநீர் இந்த செம்பருத்தி டீ.

இந்த செம்பருத்தி தேநீர் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க உதவுவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த செம்பருத்தி டீயின் சுவை நெல்லிக்காய் சுவை போல இருக்கும். பொதுவாக இந்த செம்பருத்தி தேனீரில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடித்து வரலாம். இந்த நிலையில் செம்பருத்தி டீயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ரத்த அழுத்தம் குறையும்:

நம்மில் பலருக்கும் மன அழுத்தம் பிரச்சனைகள் காரணமாக பல நேரங்களில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. இதனால் நம் உடலின் உறுப்புகள் பாதிப்படைய செய்கிறது. இந்த செம்பருத்தி டீயை குடித்து வந்தால் நம் இதய ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது. இதனால் உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க உதவும். மேலும் உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் உள்ளவர்கள் கூட இந்த செம்பருத்தி டீயை தினசரி குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். தினசரி காலை உணவிற்கு முன்பு ஒரு கிளாஸ் செம்பருத்தி டீ குடித்து வந்தால் உடலுக்கு நல்லது.

கொலஸ்ட்ரால் குறையும்:

hibiscus tea ()

நம் உடலில் ஒரு குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் எப்போதும் தேவைப்படுகிறது. ஆனால் இந்த கொலஸ்ட்ரால் நல்ல கொலஸ்ட்ரால் ஆக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சிலர் உடல் பருமனாக இருக்கும் போது நிச்சயமாக இவர்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தான் அதிகம் இருக்கும். இதனால் தான் இன்றைய காலகட்டத்தில் பலரும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளால் அவதிப்படுவது உண்டு. ஒழுங்கற்ற உணவு முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் போன்றவற்றால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்கி விடுகிறது. இந்த செம்பருத்தி டீ யில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான சுறுசுறுப்பான உடலுக்கு தினசரி செம்பருத்தி டீ குடித்து வந்தால் நல்லது.

ரத்த அணுக்கள் சீராகும்:

நம் உடலில் பல ரத்த அணுக்கள் அழிவதும் பின்பு தானாகவே உற்பத்தி ஆவதும் இயற்கையான செயல் ஆகும். ஆனால் ஒரு சில ரத்த அணுக்கள் சரியான முறையில் சுத்தம் செய்யப்படாமல் நம் உடலுக்கு சேதங்களை உண்டாக்குகின்றது. இதில் உள்ள நச்சுக்களால் உங்கள் முகம் கருமையாக மாறிவிடும். இவற்றை போக்குவதற்கு நாம் அடிக்கடி முகத்திற்கு ஸ்கிரப் செய்து வரவேண்டும். செம்பருத்தி டீயை கொண்டு உங்கள் முகத்திற்கு ஸ்கிரப் செய்வதால் ரத்த அணுக்கள் விரைவாக தூய்மையாக மாறும். அதே போல தினசரி உணவில் செம்பருத்தி டீயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கூட நம் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.

மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு:

img  ()

பெண்கள் பலருக்கும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, உடல் தொந்தரவுகள், சரியான இடைவெளியில் மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த செம்பருத்தி டீ ஒரு சிறந்த மருந்தாகும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தினசரி செம்பருத்தி டீயை குடித்து வரலாம். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அடி வயிற்று வலி போன்றவற்றை உடனடியாக குணப்படுத்த செம்பருத்தி பெரிதும் உதவுகிறது. அதே போல பெண்கள் கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீயை குடித்து வந்தால் ஹார்மோன்கள் சமமாகவும் சீராகவும் இருக்க உதவி செய்யும். இதனால் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பெண்கள் பலருக்கும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, உடல் தொந்தரவுகள், சரியான இடைவெளியில் மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த செம்பருத்தி டீ ஒரு சிறந்த மருந்தாகும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தினசரி செம்பருத்தி டீயை குடித்து வரலாம். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அடி வயிற்று வலி போன்றவற்றை உடனடியாக குணப்படுத்த செம்பருத்தி பெரிதும் உதவுகிறது. அதே போல பெண்கள் கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீயை குடித்து வந்தால் ஹார்மோன்கள் சமமாகவும் சீராகவும் இருக்க உதவி செய்யும். இதனால் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP