சாலட் முதல் டெஸர்ட் வரை அவகேடோவை கொண்டு ஏராளமான உணவுகளை தயார் செய்யலாம். சுவை நிறைந்த இந்த அவகேடோ பழத்தில் 20 வகையான வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இதனுடன் இதில் ஏராளமான நல்ல கொழுப்புகளும் புரதமும் நிறைந்துள்ளன.
உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் இந்த அவகேடோ சருமம் மற்றும் கூந்தலுக்கும் நல்லது. இதை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சி அற்புதமாகவும் இருக்கும். இதுகுறித்த தகவல்களை பிரபல நிபுணரான ஷாநஸ் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: உடலில் இந்த அறிகுறிகள் தென்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!
அவகேடோவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின்கள் A, E, C மற்றும் B6 உள்ளன. இது பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களின் நல்ல ஆதாரமாகும். மேலும் அவகேடோவில் உள்ள குணப்படுத்தும் பண்புகள் உங்களை ஆரோக்கியமாகவும், உள்ளிருந்து அளவாகவும் வைத்துக் கொள்ளும்.
அவகேடோவில் ரிபோஃப்ளேவின், நியாசின், ஃபோலேட், பாந்தோதெனிக் அமிலம் மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதில் லுடீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதனுடன் அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்பும் உள்ளது. 100கிராம் அவகேடோவில் உள்ள சத்துக்கள் விவரம் பின்வருமாறு
தினமும் ஒரு அவகேடோ பழத்தை சாப்பிடுவதன் மூலம் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.
இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் ஒலிக் அமிலம் உள்ளன. இவை கொழுப்பைக் குறைத்து இதயம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கின்றன.
அவகேடோவில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். இது வயிற்றை சுத்தப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
அவகேடோவில் நிறைந்துள்ள வைட்டமின் C எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் நோய்வாய்ப்படுவதை தவிர்க்கலாம்.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொழுப்பு தேவைப்படுகிறது. ஆரோக்கியமான கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ள அவகேடோ உங்கள் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளது. அவகேடோவில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை வலுப்படுத்தி எடையைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது.
உடல் ஆரோக்கியம் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு வைட்டமின்கள் மிகவும் அவசியம். அவகேடோவில் நிறைந்துள்ள வைட்டமின்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதுடன் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களும் சேதத்தில் இருந்தும் பாதுகாக்கின்றன. இதனால் செல்களின் உருவாக்கம் அதிகரிக்கும்.
தினம் ஒரு அவகேடோ சாப்பிட்டு வந்தால் வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கலாம். ஆரோக்கியமான திசு மற்றும் கொலாஜன் உற்பத்தி மூலம் இளமையான சருமத்தையும் பெற முடியும். மேலும் இதில் நிறைந்துள்ள வைட்டமின் A மற்றும் E உங்கள் சருமத்தை மிருதுவாக்கும்.
அவகேடோவில் உள்ள B-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் இதில் உள்ள வைட்டமின் A முடியின் அமைப்பை மேம்படுத்தி அவற்றைப் பாதுகாக்கிறது. அவகேடோ பழத்தை சாப்பிட்டு வர ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சிறுநீர் கழிப்பதில் சிரமமா? இதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com