நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள ஒரு காய்கறி வெண்டைக்காய். இந்த வெண்டைக்காய் நம் மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். வழவழப்பான இந்த வெண்டைக்காயை முறையாக சமைத்து சாப்பிட்டால் இதன் சுவை அருமையாக இருக்கும். குறிப்பாக நாம் வீட்டில் சமைக்கும் சாம்பார், பொரியல், புளிக்குழம்பு, வறுவல் என வெண்டைக்காய் வைத்து பல உணவு வகைகளை சமைத்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒரு காய்கறி இது. குறைந்தது வாரம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது இந்த வெண்டைக்காயை நம் தினசரி உணவில் சேர்த்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். இந்த வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த வெண்டைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் நம் உணவு செரிமான செயல் முறையை எளிதாக்க உதவுகிறது. இந்த வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், மலச்சிக்கல் வயிறு கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும் உங்கள் தினசரி உணவில் வெண்டைக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
உங்கள் உணவில் வெண்டைக்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை 63 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றது. குறிப்பாக இந்த வெண்டைக்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய் அபாயத்தை அதிக அளவு குறைக்க முடியும்.
குழந்தை வளர்ச்சிக்கு உதவும் ஃபோலேட் என்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்து இந்த வெண்டைக்காயில் நிறைந்துள்ளது. இது கர்ப்பிணி பெண்களின் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும் இரும்பு சத்து பற்றாக்குறை மற்றும் அவர்கள் உடலில் ஏற்படும் ரத்த சோகையை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி சத்து தாய் மற்றும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த வெண்டைக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து கல்லீரல் செல்களை பாதுகாக்க உதவுகிறது. கல்லீரல் சார்ந்த நோய்களை குணப்படுத்த உங்கள் தினசரி உணவில் வெண்டைக்காயை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
நம் கண்கள் மற்றும் அதன் நரம்புகளுக்கு அதிக நன்மைகளை தருகின்ற வைட்டமின் ஏ சத்து இந்த வெண்டைக்காயில் அதிக அளவு நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் கண் சார்ந்த பல நோய்களை தடுக்கலாம். வெண்டைக்காயை தினசரி உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் தெளிவான கண் பார்வையையும் பெற முடியும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com