Curry Leaves Benefits: கறிவேப்பிலை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

curry leaf for hair
curry leaf for hair

நாம் தினசரி சமைக்கும் பெரும்பாலான உணவு பொருட்களில் கறிவேப்பிலை சேர்ப்பது வழக்கம். பொதுவாகவே கறிவேப்பிலை உணவில் நல்ல மணத்திற்காக சேர்க்கக்கூடிய ஒரு மூலிகை பொருள் என்று கூறலாம். குறிப்பாக பொறியியல், குழம்பு அல்லது தாளிக்கும் போது கறிவேப்பிலை இல்லாமல் இருக்கவே இருக்காது. அந்த அளவிற்கு கறிவேப்பிலையை நம் உணவு வகைகளில் சேர்த்து வைத்துள்ளோம். குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். இதில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, போன்ற நம் உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது. இந்த கறிவேப்பிலை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ரத்த சோகை குணமாகும்:

இந்த கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் அதிக அளவு நிறைந்துள்ளது. இந்த போலிக் ஆசிட் நம் உடலில் உள்ள இரும்புச்சத்தை அதிகரிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் அதிகமாக இருக்கும் பொழுது ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். இதனால் ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் தினசரி உணவில் கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

மேலும் படிக்க: கருப்பை பிரச்சனை உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

சர்க்கரை நோய் குணமாகும்:

இந்தக் கறிவேப்பிலையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு நோய் குறைந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்தக் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் சர்க்கரையின் அளவை ரத்தத்தில் சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவில் இந்த கறிவேப்பிலையை அதிக அளவு சேர்த்து சாப்பிட்டு வரும்போது சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும். அதே போல இந்த கறிவேப்பிலையில் உள்ள நார்ச்சத்து நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைப்பது மட்டுமல்லாமல் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.

curry leaves   cede

செரிமானம் சீராகும்:

நம் முன்னோர்கள் நல்ல மணத்திற்காக மட்டுமல்லாமல் ஒரு சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் காரணமாக கறிவேப்பிலையை பெரும்பாலான உணவுப் பொருட்களில் சேர்த்து சமைத்து வந்தனர். குறிப்பாக நம் உடலில் உள்ள கொழுப்பு சத்தை உறிஞ்சி கெட்ட கொழுப்புகளை கரைக்க இந்த கறிவேப்பிலை உதவுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும். உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் கறிவேப்பிலையை பொடி செய்தும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இந்த கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால் உணவு செரிமானம் சீராகும்.

கொலஸ்ட்ரால் குறையும்:

இயற்கையாகவே கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த கறிவேப்பிலை ஒரு சிறந்த மருந்து. இந்த கறிவேப்பிலையில் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் இது நம் உடலில் உள்ள எல்டிஎல் எனக் கூறப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதனால் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் எச்டிஎல் அதிகரிக்கக்கூடும். இந்த நல்ல கொலஸ்ட்ரால் நம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

இளநரை பிரச்சனை குணமாகும்:

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் சிறு வயதிலேயே தலைமுடி நரைத்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை தான். இந்த நிலையில் கறிவேப்பிலை இந்த இளநரை பிரச்சனைக்கு ஒரு சிறந்த மருந்து. நம் தலைமுடி நரைத்து விடாமல் பாதுகாக்கவும் வலுவடையவும் இந்த கறிவேப்பிலையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இது முடி கொட்டுதல் போன்ற பல விதமான தலைமுடி பிரச்சனைகளையும் நாளடைவில் குணப்படுத்த உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவும் கழுவி சாப்பிடுவது நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP