Fenugreek Tea Benefits: தினமும் வெந்தய டீ குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

தினமும் வெந்தய டீ குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்த இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

fenugreek tea benefits
fenugreek tea benefits

நம் வீடுகளில் சமைக்கும் பல உணவுப் பொருட்களில் வெந்தயம் சேர்ப்பது பழக்கம். இந்த வெந்தயத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. சமையலில் மட்டும் வெந்தயத்தை சேர்க்காமல் இதை வைத்து டீ தயாரித்து குடித்து வரலாம். இந்த வெந்தயம் நம் உணவில் சுவையை மட்டும் அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. உடல் சூட்டை தணிக்க வெந்தயத்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ஆனால் இதையும் தாண்டி நம் உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் இந்த வெந்தயத்தில் நிறைந்துள்ளது. இந்த வரிசையில் வெந்தய டீ குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வெந்தய டீ செய்வது எப்படி?

fenugreek tea   ()

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது வெந்தயத்தை சேர்த்து குறைந்தது மூன்று நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதனை வடிகட்டி தேன் கலந்து சூடாகவோ அல்லது குளிர்ந்த பின்பு குடிக்கலாம். தினசரி காலையில் வெந்தய டீ குடித்து வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

இளமையான தோற்றம் கிடைக்கும்:

வெந்தய டீ குடித்து வந்தால் உங்கள் உடலுக்கு அதிக அளவிலான ஆன்டிஆக்சிடென்ட்கள் கிடைக்கிறது. இது உங்கள் சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள் சுருக்கங்கள் மற்றும் தழும்புகளை எதிர்த்து போராட உதவும்.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்:

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலருக்கும் குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரப்பது சற்று கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் வெந்தய டீ குடித்து வந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதிக அளவு நன்மை கிடைக்கும். சில மருத்துவ ஆராய்ச்சிகள் படி வெந்தைய டீ பருகிய தாய்மார்களின் தாய்ப்பால் உற்பத்தி அதிகரித்ததாக தெரியவந்துள்ளது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்:

தினசரி வெந்தய டீ குடித்து வந்தால் உடலில் இன்சுலின் உணர்ச்சி கட்டுப்படுத்த முடியும். இதனால் சர்க்கரை நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் தாராளமாக இந்த வெந்தய டீயை தினமும் குடித்து வரலாம். இது அவர்களின் உடலில் உள்ள குளுக்கோஸ் சகிப்புத்தன்மையில் முன்னேற்றம் ஏற்படுத்த உதவுகிறது.

உடல் எடை குறையும்:

உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இந்த வெந்தய டீயை தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இந்த வெந்தய டீ ஊட்டச்சத்து அளிக்க உதவுகிறது. இந்த வெந்தய டீ குடித்து வரும் போது உடல் எடை குறைய சற்று தாமதமாகலாம். ஆனால் கண்டிப்பாக உடல் எடை குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: உடலில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் உணவுகள்

செரிமானம் சீராகும்:

மலச்சிக்கல் பிரச்சனையால் தொடர்ந்து அவதிப்படுபவர்களுக்கு இந்த வெந்தய டீ ஒரு சிறந்த மருந்து. இந்த வெந்தய டீயில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உங்கள் உணவு செரிமானம் சீராகும். இது மலக்குடல் எரிச்சல் போன்ற நோயிலிருந்து குணப்படுத்தவும், அதிக சிரமம் இல்லாமல் மலம் கழிக்கவும் உதவுகிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP