herzindagi
image

சிறுநீரக பிரச்சனையா? கவலைய விடுங்க.. இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் போதும்!

சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சனை ஏற்படும் போது நச்சுப்பொருட்கள் நம் ரத்தத்தில் தங்கி விடும். இது காலப்போக்கில் சிறுநீரக நோய் தொற்று போன்ற பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Editorial
Updated:- 2025-03-22, 11:33 IST

இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் என்பது நம்மில் பலரும் அதிகம் கவலை படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது. இதற்கு காரணம் நம் உணவுமுறை மற்றும் பழக்க வழக்கங்கள். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க நாம் உட்கொள்ளும் உணவு மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக நம் உடல் ஆரோக்கியமாக செயல்பட சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சனை ஏற்படும் போது நச்சுப்பொருட்கள் நம் ரத்தத்தில் தங்கி விடும். இது காலப்போக்கில் சிறுநீரக நோய் தொற்று போன்ற பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அந்த வரிசையில் உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் சில உணவு பொருட்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

காலிஃபிளவர்:


இந்த காலிஃபிளவரில் வைட்டமின் கே சத்து, போலேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் உங்கள் சிறுநீர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக இந்த காலிஃபிளவரை உணவில் சேர்த்து சாப்பிடலாம். உருளைக்கிழங்கு பொரியலில் இனி உருளைக்கு பதில் இந்த காலிஃபிளவரை சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள்.

247WallSt.com-247WS-731822-imageforentry6-9di

ப்ளூபெர்ரி:


பெர்ரி பழங்கள் பொதுவாகவே சாப்பிட அதிக சுவையாக இருக்கும். இந்த நிலையில் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரு சுவையான பழம் ப்ளூபெர்ரி. இதில் ஆக்சிஜினேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் இதய நோய் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும். அந்த வரிசையில் இந்த ப்ளூபெர்ரியை வெறுமனே சாப்பிடலாம் அல்லது மில்க்ஷேக் செய்து கூட குடிக்கலாம்.

முட்டை:


முட்டையின் வெள்ளை கருவில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இது பாஸ்பரஸ் அளவில் கம்மியாக இருப்பதால் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். காலை வேளையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக சமைத்து சாப்பிடலாம் அல்லது மாலை ஸ்னாக்ஸ் போல கூட இந்த முட்டையை காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சுவையாக சாப்பிடலாம்.

rsz_shutterstock_78615403

பூண்டு:


பல இந்திய உணவுகளில் இந்த பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் சமைக்கும் உணவில் பூண்டு சேர்ப்பது உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். வைட்டமின் பி 6 சத்தின் சிறந்த மூலம் இந்த பூண்டு. உங்கள் உணவில் பூண்டு சேர்த்து சமைப்பதன் மூலம் செரிமான பிரச்சனைகளை தவிர்க்க முடியும். மேலும் இது ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க: தினசரி உணவில் சேர்க்க வேண்டிய கொழுப்பு நிறைந்த உணவுகள்; இப்படி சாப்பிட்டு பாருங்க

ஆலிவ் எண்ணெய்:


சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் வீட்டில் சமையலுக்கு இந்த ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். இதில் ஆரோக்கியமான கொழுப்பு வகைகள் மற்றும் வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளது. எனவே நீங்கள் உட்கொள்ளும் உணவு எளிதில் செரிமானம் ஆக உதவும். அதே போல சமையலில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சமைக்கும் போது உணவின் சுவை கூட அதிகரிக்கும்.

இது போன்ற ஆரோக்கியமான உணவு பொருட்களை உங்கள் தினசரி டயட் முறையில் சேர்ப்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான சிறுநீரகங்களை பராமரிக்க முடியும். அது மட்டும் இல்லாமல் பொதுவாக சிறுநீரக பிரச்சனை ஏற்பட இன்னொரு முக்கிய காரணம் சிறுநீர் அடக்கி வைப்பது. பெரும்பாலான மக்கள் வெளியில் செல்லும் போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே மறந்து விடுவார்கள். ஒரு சிலர் வெளியில் இருக்கும் கழிப்பறைகள் சுகாதாரம் இல்லாமல் இருக்கும் என்பதால் சிறுநீர் கழிக்க மாட்டார்கள். ஆனால் இதுவே அவர்களுக்கு சிறுநீரக பிரச்சனைகளை உருவாக்கும். நிறைய தண்ணீர் குடிப்பது, சரியான நேரங்களில் அடக்காமல் சிறுநீர் கழிப்பது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போன்ற விஷயங்களை செய்தாலே போதும் மருந்து மாத்திரைகள் இல்லாமல் சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். அதே போல உங்கள் தினசரி உணவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யும் போது உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.


Image source: google

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com