மோசமான உணவு முறை, தூக்க சுழற்சி, நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது, குறைந்த உடல் செயல்பாடு போன்ற பல பழக்கவழக்கங்களால் உடலில் நச்சுக்கள் சேர்ந்துவிடுகின்றன. இது போன்ற பழக்க வழக்கங்களால் உடல் பலவீனம் ஆகலாம். உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய இது போன்ற நச்சுக்களை உடலை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லையேல் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமின்றி இது உங்களை சோம்பலாகவும் உணர வைக்கலாம்.
சோம்பேறித்தனத்தால் எந்த வேலையையும் செய்ய விருப்பமில்லையா?
அல்லது உங்களால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியவில்லையா?
அல்லது சில நாட்களாக உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக வர தொடங்கி விட்டதா ?
அல்லது வாயு, எரிச்சல், வயிற்றில் வலி போன்றவற்றால் நீங்கள் சிரமப்படுகிறீர்களா?
இது போன்ற அறிகுறிகள் உடலை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தெரியப்படுத்துகின்றன. உடலில் இருந்து தேவையற்ற நச்சுக்களை அகற்றுவதன் மூலம் பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கலாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த செயல் முறையை செய்ய முடியும். இதற்கு உதவக்கூடிய 5 உணவுகள் பற்றி உணவியல் நிபுணர் சிம்ரன் சைனி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பை, இடுப்பு மற்றும் தொடையில் உள்ள கொழுப்பு குறைய சுலபமான 3 பயிற்சிகள்!
உடலை உள்ளிருந்து சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் சுலபம். உங்கள் அன்றாட உணவில் சில விஷயங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். உடலை டீ டாக்ஸ் செய்வதன் மூலம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நச்சுக்களை அகற்றலாம். இதனால் நச்சுக்கள் நீங்கி இரத்தம் சுத்தமாகும். இதனால் பருக்கள், கொப்புளம் போன்ற பல பிரச்சனைகளை தடுக்கலாம். இதனுடன் எடை கட்டுப்பாடு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கலாம். டீடாக்ஸ் செய்வதால் வயது முதிர்வின் அறிகுறிகளையும் குறைக்கலாம் மற்றும் ஆற்றலுடன் செய்லபடலாம்.
சூரியகாந்தி விதைகளில் செலினியம் மற்றும் வைட்டமின் E நிறைந்துள்ளன, இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இவை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உருவாவதையும் தடுக்கின்றன. இதில் உள்ள மெக்னீசியம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் டோபமைன் D-1 இரசாயனத்தையும் குறைக்கிறது. நார்ச்சத்து நிறைந்த சூரியகாந்தி விதைகள் சுவையானது மட்டுமல்ல, இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாகவும் வைத்துக் கொள்ளும்.
பூண்டு ஒரு சிறந்த டீடாக்ஸ் உணவாகும். இதில் ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி பயாடிக் போன்ற பண்புகளுடன் அல்லிசின் என்ற ஒரு தனிமும் உள்ளது. இது வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. ஆகையால் பூண்டை உங்கள் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொத்தமல்லியில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு, செப்டிக் எதிர்ப்பு பண்புகள் தீங்கு விளைவிக்கும் கூறுகளை செல்களில் இருந்து அகற்றுகின்றன. இவை கல்லீரலை சுத்தப்படுத்தும் என்சைம்களை அதிகரிக்கின்றன. உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற கொத்தமல்லி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது உணவிலும் சேர்க்கலாம். கொத்தமல்லி இலைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
பீட்ரூட் பெண்களுக்கு மிகவும் நல்லது. இதில் மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் C சத்துக்கள் உள்ளன. உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்கவும், கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பீட்ரூட் சாப்பிடலாம். இதற்கு பீட்ரூட்டை கொண்டு சாலட், ஜூஸ் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.
மூளை வடிவ அக்ரூட் பருப்புகள் உங்கள் மூளைக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் நன்மை பயக்கிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நச்சுக்களை வெளியேற்றுவதில், இவை சிறப்பாக செயல்படுகின்றன. இதில் உள்ள தாமிரம், மக்னீசியம் மற்றும் பயோட்டின் ஆகியவை புற்றுநோயைத் தடுக்கின்றன. அக்ரூட் பருப்புகளை சாப்பிட்டால் புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். இது தவிர இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதன் மூலம் இளமையில் ஏற்படும் வயது முதிர்வை தடுக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: கருப்பு கொண்டைக்கடலை சாப்பிட சரியான நேரம் எது? நிபுணர் டிப்ஸ்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com