herzindagi
hair fall control diet expert tips

Hair Fall Foods : முடி உதிர்வை தடுக்க, நீங்கள் சாப்பிட வேண்டிய 2 உணவுகள்

பனி காலங்களில் ஏற்படும் கூந்தல் வறட்சியால் முடி உதிர்வு ஏற்படலாம். இதை தடுக்க நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த 3 உணவுகளையும் உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்…
Editorial
Updated:- 2023-10-07, 09:53 IST

வெயில் காலம் முடிந்து விட்ட நிலையில், லேசான குளிர், மழையென அடுத்த பருவ காலத்தை வரவேற்க தயாராகிவிட்டோம். பொதுவாக குளிர்காலங்களில் சருமத்தில் வறட்சி ஏற்படும். இதனால் சரும பிரச்சனைகள் மற்றும் கூந்தல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக ஒரு சிலருக்கு இந்தக் பருவ காலத்தில் அதிகப்படியான முடி உதிர்வும் இருக்கும்.

மாறிவரும் பருவ காலத்தை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் நம்முடைய உணவு முறையை மாற்றிக் கொள்வதன் மூலமாக இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும். இந்த பருவ காலத்தில் ஏற்படக்கூடிய முடி உதிர்வை தடுக்க ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் சில எளிய குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். முடி உதிர்வை தடுக்க உதவும் உணவுகள் பற்றிய தகவல்களை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இரவு பாலில் நெய் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

முடி உதிர்வை தடுக்கும் கறிவேப்பிலை

hair fall control diet curry leaf

தினமும் 5-7 கறிவேப்பிலை இலைகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். நீங்கள் சமைக்கும் உணவுகளில் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சுத்தமான கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிடலாம். இது ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிப்பதோடு மட்டுமின்றி இரத்த சர்க்கரையின் அளவுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இளநரையை தடுக்கலாம்.

இதைத் தவிர குளிர் காலங்களில் ஏற்படும் பொடுகு தொல்லையிலிருந்து நிவாரணம் பெற கறிவேப்பிலையை அரைத்து தலைக்கு பேக் ஆகவும் போடலாம். கறிவேப்பிலையை சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் அதை தண்ணீருடன் சேர்த்து டீயாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது தயிருடன் கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து மோர் ஆகவும் கடைந்து குடிக்கலாம்.

முடியை வலுப்படுத்தும் எள்ளு 

hair fall control diet tips sesame

  • எள் விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுப்படுத்தவும், மூட்டுகள், கூந்தல், சருமம் மற்றும் இதயத்திற்கு பலம் சேர்க்கவும் உதவுகின்றன.
  • எள் விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் கறிவேப்பிலை டீயுடன் சிறிதளவு எள் விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • வறுத்த எள் விதைகளை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம். இதனை நீங்கள் சாப்பிடும் உணவு, டோஸ்ட் அல்லது சாலட்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
  • இதைத் தவிர எள்ளுடன் வெல்லம் சேர்த்து எள்ளு உருண்டை அல்லது எள்ளு மிட்டாய் செய்து சாப்பிடலாம். 

இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைக்க ஈஸியான வழி, இளநீர் குடியுங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com