மழைக்காலம் என்பது குளுமையான வானிலை, மண் வாசனை மற்றும் இனிமையான அனுபவங்களை அளிக்கும். ஆனால், இந்தக் காலம் முடி உதிர்வை அதிகரிக்கவும் கூடும். காற்று மற்றும் ஈரப்பதம் அதிகரிப்பதால் முடி வலுவிழந்து எளிதில் உதிர்ந்து விடுகிறது.
மேலும் படிக்க: தயிர் இருந்தால் போதும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றலாம்!
எனினும், சரியான உணவுமுறையை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்கலாம். மழைக்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் 5 உணவுகள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
முட்டையில் பயோட்டின் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இவை முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது முடி உதிர்வை தடுக்க உதவும்.
கீரைகளில் இரும்புச் சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளன. இவை உச்சந்தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. இதனால், முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து, முடி ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் படிக்க: Hair growth tips: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் 5 விதமான சத்துகள்; மிஸ் பண்ணாதீங்க மக்களே
பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா போன்ற விதை வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், சின்க் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இவை உச்சந்தலையில் உள்ள வறட்சியை போக்கி முடி உதிர்வை தடுக்கின்றன.
தயிரில் அதிக புரதம் மற்றும் வைட்டமின் பி5 உள்ளன. இவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரித்து, முடி பலவீனம் அடைவதை தடுக்க உதவுகின்றன.
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இது முடியின் வேர்களை வலுப்படுத்துவதோடு, கொலஜன் உற்பத்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் வளரும்.
இவை அனைத்தையும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மழைக்காலத்திலும் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் பராமரிக்கலாம். இவை மட்டுமின்றி அதிகப்படியான இரசாயன பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்தல், சரியான தூக்கம், மன அழுத்தம் இன்றி இருத்தல் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் உங்கள் கூந்தல் வளர்ச்சி மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com