கேழ்வரகு சிறுதானிய வகைகளில் ஒன்றாகும். இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவி செய்கிறது. கேழ்வரகு வைத்து களி, புட்டு, தோசை, அடை, கூழ் என பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். கேழ்வரகு சேர்த்து செய்யப்படும் எந்த வகை உணவாக இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் சத்தான ஆரோக்கியமான ராகி அடை செய்வது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
நமது தினசரி உணவு முறையில் கேழ்வரகில் செய்யப்படும் உணவினை காலை அல்லது இரவில் சாப்பிடலாம். ராகியில் செய்யப்படும் உணவு வகைகளை முடிந்த அளவு நாம் நமது உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குறிப்பாக பெண்களின் உடலில் உள்ள சர்க்கரை அளவை கேழ்வரகு பெருமளவில் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை அளவை குறைப்பதோடு இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் பற்களுக்கும் உடலில் உள்ள முக்கியமான எலும்புகளுக்கும் இது மிகவும் நல்லது. கேழ்வரகில் புரதச்சத்து அதிகம் உள்ளது.இது நமது உடலையும் மூளையையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
கேழ்வரகை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். ஆரோக்கிய குணம் மிகுந்த கேழ்வரகை அடையாக செய்து காலை மாலை வேலைகளில் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் ராகி அடை கொடுத்தால் மிகவும் நல்லது.
சுவையான ராகி அடை ரெடி!
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com