onion leaves: வெங்காயத் தாளிலிருந்து எண்ணெய் தயாரிக்கலாமா! இத்தனை நாள் இது தெரியாமா போச்சே!

onion leaves: சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெங்காயத்தாளிலிருந்து எண்ணெய் தயாரிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

onion leaves big

குளிர்காலம் வந்துவிட்டது, பச்சைக் காய்கறிகளும் மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன. இந்த குளிர்காலத்தில் பசுமையான வெங்காயத்தாள்களும் கிடைக்கும். உணவைப் பற்றிப் பேசும்போது வெங்காயத்தாளின் சுவையைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் இன்று இந்த பதிவில் வெங்காயத்தாள் ரெசிபி பற்றிப் பேசப் போவதில்லை. வெங்காயத்தாளிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் முறைபற்றி உங்களுக்கு சொல்ல போகிறோம். இதனுடன் இந்த எண்ணெயை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை இரண்டையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதை கண்டிப்பாக உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

எண்ணெய் தயாரிப்பது எப்படி?

வெங்காயத்தாளை ஃபிரிட்ஜில் வைத்தாலும் நீண்ட நாட்களுக்கு அது ஃபிரஷாக இருக்காது. பிரிஞ்சி இலை, கிராம்பு, கறிவேப்பிலை போன்ற மசாலா பொருட்கள் நம்ம ஊர் சமையலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் சீனர்களின் சமையலில் இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தாள்களின் எண்ணெய் மிகவும் முக்கியமானவை. இவை காய்கறிக்கு நல்ல சுவையையும் மணத்தையும் தருகின்றன. இப்போது வெங்காயத்தாள் எண்ணெய் தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

onion leaves

  • சமையல் எண்ணெய் - 2 கப் (கடுகு அல்லது வெஜிடபிள் எண்ணெய்)
  • சின்ன வெங்காயம் - 150 கிராம்
  • வெங்காயத்தாள் - 150 கிராம்

செய்முறை

  • முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • வெங்காயத்தாளை தண்ணீரில் அலசி, சுத்தமான துணியால் துடைத்துக் கொள்ளவும்.
  • தாளின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதியைக் கவனமாகப் பிரித்துத் தனியாக எடுக்கவும்.
  • பிறகு வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடு செய்யவும்.
  • எண்ணெய் சூடானதும், அதில் வெங்காய துண்டுகளைச் சேர்க்கவும்.
  • சிறிது நேரம் கழித்து வெங்காயம் பொன் நிறமாக மாறத் தொடங்கியதும் அதை எண்ணெயிலிருந்து வெளியே எடுக்கவும்.
  • இப்போது அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தாள்கள் மற்றும் அவற்றின் வெள்ளை பகுதியைச் சேர்க்கவும்.
  • எண்ணெயை மிதமான தீயில் 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
onion leaves
  • பிறகு அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
  • எண்ணெய் ஆறியதும் அதை சுத்தமான பாட்டிலில் மாற்றி ஃபிரிட்ஜில் வைக்கவும்.
  • இந்த எண்ணெயை நீங்கள் ஒரு மாதம்வரை பயன்படுத்தலாம். சுத்தமான ஈரம் இல்லாத கரண்டியை பயன்படுத்தி தான் இதை உபயோகிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எண்ணெய்யை பயன்படுத்தும் முறை

  • சமைக்கும்போது வெங்காயம் தீர்ந்து விட்டாலோ அல்லது சமையலில் வெங்காயத்தை பயன்படுத்த விரும்பவில்லை என்றாலோ, அதற்கு பதிலாக இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது உணவின் சுவையைக் கூட்டும்.
  • சாலட்டை சுவையாக மாற்ற அல்லது சாலட்டில் புதியதாக ஏதாவது ஒன்றை சேர்க்க விரும்பினால், இந்த எண்ணெயைத் தேவைகேற்ப சாலட்களிலும் சேர்க்கலாம்.
  • நூடுல்ஸ், மீன், சூப், ரொட்டி போன்ற உணவுகளிலும் இந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்தலாம்.

நீங்கள் எப்போதாவது வீட்டில் எண்ணெய் தயாரித்திருக்கிறீர்களா? கமெண்டில் தெரியப்படுத்துங்கள். இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்ய மறவாதீர்கள். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP