herzindagi
places to enjoy your honeymoon in tamilnadu

romantic places in tamilnadu : தமிழ்நாட்டில் காணப்படும் ஹனிமூனுக்கு ஏற்ற இடங்கள்

தமிழ்நாட்டில் இருக்கும் மிகச் சிறந்த ஹனிமூன் சுற்றுலாதளங்கள் எது தெரியுமா? அங்கு என்னவெல்லாம் பிரபலம்?  வாருங்கள் இந்த பதிவின் மூலம் படித்தறிந்து பயன்பெறலாம்.
Editorial
Updated:- 2023-02-25, 09:25 IST

ஊட்டி

புதுமண தம்பதிகள் ஹனிமூன் என்றதும் முதலில் பிளான் போடும் இடம் ஊட்டி. மலைப்பிரதேசம், சுத்தமான காற்று காண்போர்களையும் நிச்சயம் கவரும். ஊட்டியில் நீர்வீழ்ச்சிகள், டீ எஸ்டேட், சாக்லேட் ஃபேக்ட்ரி, மலர் கண்காட்சி ஆகியவையும் பயங்கர ஃபேமஸ்

கொடைக்கானல்

திண்டுகல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் ஹனனிமூன் ஜோடிகளுக்கு சிறந்த சுற்றுலாதளமாகும். மலைகளின் இளவரசி, ஏரி, காடுகள், நீர் வீழ்ச்சி, ரிவர் ராஃப்டிங் என ஏகப்பட்ட இடங்களை சுற்றி பார்க்கலாம். பட்ஜெட்டில் முடியக் கூடியது.

குன்னூர்

eagle view of coonoor

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர், ஹனிமூன் செல்பவர்களுக்கு மிகச் சிறந்த இடம். இங்கு இருக்கும் உதகை மண்டலம் ரயில் பயணம் மறக்க முடியாத அனுபவத்தை தரும். நிச்சயம் என்ஜாய் செய்யலாம்.

மேகமலை

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை இயற்கையின் அதிசயம் என்றே சொல்லலாம். சுற்றி மரங்கள், பசுமை, நீர்வீழ்ச்சி என மினி கேரளா தான். சமீப காலமாக மேகமலைக்கு ஹனிமூன் ஜோடிகள் அதிகம் வருகை தருகின்றனர்.

வால்பாறை

scenic view of valparai

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வால்பாறை ஹனிமூன் செல்ல சிறந்த இடம் என்றே சொல்லலாம். பனிமூட்டம், ட்ரக்கிங் என இங்கு பார்த்து ரசிக்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கிறது. இயற்கையுடன் இருக்க ஆசைப்படுபவர்கள் நிச்சயம் வால்பாறை செல்லலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com