சுற்றுதலங்களுக்கு பெயர் போன மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. மரங்கள், காடுகள், கோயில்கள், கடல்கள், அருவிகள், மலைகள் என எல்லாவிதமான இயற்கை சூழலை கொண்டிருக்கும் தமிழ் நாட்டில் சுற்றி பார்க்க எவ்வளவோ இடங்கள் உள்ளன. நண்பர்களுடன், குழந்தைகள், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கோயில்களின் நிலம் எனச் சொல்லப்படும் தமிழகத்தில் எல்லா மாவட்டத்திலும் சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளன. ஆன்மீக சுற்றுலா சென்றாலும் சரி, குடும்பத்துடன் பிக்னிக் சென்றாலும் சரி பல கோயில்களை வரிசையாக பார்க்கலாம். அதே போல இயற்கையுடன் சேர்ந்து வாழ நினைப்பவர்கள் மலை பிரதேசமான ஊட்டி, கொடைக்கானல் பக்கம் செல்லலாம். வாருங்கள் விரிவாக பார்போம்.
இந்த பதிவும் உதவலாம்:தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல கோயில்களை பார்க்க மறந்துடாதீங்க
தூங்கா நகரமான மதுரையில் சுற்றி பார்க்க பல சிறப்புமிக்க வரலாற்று இடங்கள் உள்ளன. ஆன்மீகா யாத்திரை செல்ல நினைப்பவர்களும் மதுரையை தேர்ந்தெடுக்கலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தொடங்கி திருமலை நாயக்கர் மஹால், காந்தி அருங்காட்சியகம், கூடல் அழகர் கோயில், ஆயிரம் கால் மண்டபம், சமணர் கோயில், தெப்பக்குளம், புனித மேரி தேவாலயம் என 2 நாள் சுற்றுலா செல்ல மிகவும் பொருத்தமான இடமாக மதுரை உள்ளது.
கட்டிடக்கலைக்கு பெயர் போன தஞ்சை மண்ணில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. பிரகதீஸ்வரர் கோயில் தொடங்கி பழைய சோழர்களின் நினைவு சின்னம், தஞ்சாவூர் அரண்மனை ஆகியவற்றை கண்டு ரசித்து செட்டி நாடு உணவுகளையும் சுவைத்து மகிழலாம்.
மலைப்பிரதேசம் விரும்புவர்கள் ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு, வால்பாறை பக்கம் செல்லலாம், கொட்டும் அருவிகள், நீர் வீழ்ச்சிகள், குகைகள், மலை கோயில்கள் என இயற்கையின் அதிசயத்தை கண்டு ரசிக்கலாம்.
பல சிறப்புகளுக்கு பெயர் போன ராமேஸ்வரத்தில் காண வேண்டிய இடங்களின் பட்டியல் மிகவும் பெரியது. ராமநாதசுவாமி கோயில் தொடங்கி அப்துல் கலாமின் நினைவு சின்னம், பாம்பன் பாலம், தனுஷ் கோடி, ராமர் சேது பாலம், வில்லூண்டி தீர்த்தம், அக்னி தீர்த்தம், தனுஷ் கோடி கடற்கரை, ராமேஸ்வரம் கடற்கரை என 3 நாட்களுக்கு பட்டியல் போட்டு ஒவ்வொரு இடங்களையும் கண்டு ரசிக்கலாம். அலை சறுக்கு, பாராசெயிலிங் வசதிகளும் இங்கு உள்ளன.
இந்தியாவின் தென்கோடி முனையான இங்கு பல்வேறு சிறப்பு வாய்ந்த இடங்கள் உள்ளன. திருவள்ளுவர் சிலை தொடங்கி காந்தி நினைவிடம், விவேகானந்தர் பாறை, வட்டக்கோட்டை கடற்கரை, பத்நாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொங்கும் பாலம் என பல இடங்களை கண்டு களிக்கலாம். குறிப்பாக பள்ளி மாணவர்கள் பல வரலாற்று தகவல்களை இங்கு அறிந்து கொள்ள முடியும்.
சென்னை மெரினா கடற்கரை தொடங்கி மகாபலிபுரம், நினைவு சின்னங்கள், சராணலயங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியம், பொழுதுபோக்கு விடுதிகள், தீம் பார்க், கோயில்கள் என சுற்றுலா வர மிகச் சிறந்த இடமாக உள்ளது.
வேளாங்கண்ணி இந்தியாவின் மிகவும் பிரபலமான கிறிஸ்தவ ஸ்தலமாகவுள்ளது. சுற்றுலாவாசிகளால் விரும்பப்படும் கடற்கரை நகரமாகவும் இது திகழ்கிறது. கடற்கரைகள், தேவாலயங்கள், சந்தைகள் என இங்கு சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளன நாகப்பட்டினத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வேளாங்கண்ணி, குடும்பத்துடன் சென்று வர சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குறைந்த செலவில் டூர் போக தென்னிந்தியாவில் உள்ள இடங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com