கலாச்சாரம், மொழி, பண்பாடு, மத நம்பிக்கை எல்லாவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் அதிகமான கோயில்கள் உள்ளன. இவை வரலாற்று சிறப்புடன் ஜொலிக்கின்றன. ‘கோயில்களின் நிலம்’ எனச் சொல்லப்படும் தமிழ்நாட்டில் பண்டை கால கோயில்கள் தொடங்கி அரசர்கள் கட்டிய கோயில்கள் வரை ஏகப்பட்ட கோயில்கள் தமிழ்ர்களின் கட்டிட கலையை உலகிற்கு அறிய செய்கின்றன.
அந்த வகையில் இந்த பதிவில் தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான கோயில்கள் பற்றி விரிவாக பார்ப்போம். வரலாற்று திராவிட, சோழ மற்றும் பல்லவ காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் இன்றும் பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. இந்த பதிவில் குறிப்பிடப்படும் அனைத்தும் கோயில்களும் நிச்சயமாக சிறந்த ஆன்மீக அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த பதிவும் உதவலாம்:தமிழ்நாட்டில் இருக்கும் நீர்வீழ்ச்சிகள் விசிட் அடிக்க தயாராகுங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
நீண்ட வரலாற்று பெருமையை கொண்ட மதுரை மாநகரில் அமைந்திருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக புகழ்பெற்றது. மதுரையை ஆண்ட நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படும் . கள்ளழகர் திருவிழா தொடங்கி மாசி திருவிழா, மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் திருமணம் ஆகியவை இங்கு மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகின்றன.
தஞ்சாவூர் பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயிலான பிரகதீஸ்வரர் ஆலயம், சோழர்களின் பெருமையை இந்த உலகிற்கு சொல்லும் மகுடமாய் உள்ளது. இது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. மேலும், இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்தின் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. . தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் தஞ்சை பெரிய கோயில் முதலிடத்தில் உள்ளது.
பொற் கோயில் வேலூர்
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபுரம் பொற்கோவில் முற்றிலும் தூய தங்கத்தால் கட்டப்பட்டது, தமிழ்நாட்டின் இந்த பொற்கோயில் உலக புகழ் பெற்றது. இரவில் இந்த கோயிலின் அழகை பார்த்து மயங்காதவர்களே இல்லை.
கன்னியாகுமரி பகவதி அம்மன்
இந்த கோவில் 3000 ஆண்டுகளுக்கு முந்தையது. கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும், மேற்கு பகுதியில் அரபிக்கடலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில்
இக்கோயில் 11ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. தெய்வீக நடனக் கலைஞரான சிவபெருமானின் நடராஜ அவதாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பாலமுருகன் கோயில்
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் சிறுவாபுரியில் அமைந்துள்ளது. உலக புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அண்ணாமலையார் திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோயில் சோழர்களின் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். அண்ணாமலை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு கிரிவலம் செல்வது மிகவும் புகழ் பெற்ற ஒன்று.
கபாலீஸ்வர கோயில் சென்னை
சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வர கோயில் கிபி 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தல பெருமை வரலாற்று பெருமை என இந்த கோயில் பல விசேஷங்களை கொண்டது.
இந்த பதிவும் உதவலாம்:குறைந்த செலவில் டூர் போக தென்னிந்தியாவில் உள்ள இடங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.