Cheapest Pet Market : சென்னையில் குறைந்த விலைக்கு செல்ல பிராணிகளை வாங்க எங்க செல்ல வேண்டும் தெரியுமா?

சென்னையில் குறைந்த விலையில் செல்ல பிராணிகளை வாங்க எங்கு செல்ல வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம். நாய் தொடங்கி மீன், புறா, பறவைகள், பூனை என இங்கு கிடைக்காத செல்ல பிராணிகளே இல்லை. 

pet market in chennai

செல்லப்பிராணிகளை விரும்பாதவர்களே இல்லை. நாய், பூனை என எதாவது ஒரு பிராணியை வீட்டில் வளர்க்கும் பழக்கம் சமீபகாலமான அதிகரித்துள்ளது. அவற்றை வெறும் செல்ல பிராணிகளக மட்டுமே பார்க்காமல் வீட்டில் ஒரு உறுப்பினர் போலவே பார்க்கும் பல உள்ளங்கள் இங்கு உள்ளன. குறிப்பாக குழந்தைகள் அதிகம் இருக்கும் வீட்டில் செல்ல பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. வீட்டில் குழந்தைகளுடன் சேர்ந்து அந்த ஜீவனும் வளர்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் சென்னையில் இருக்கும் பெட் மார்க்கெட்கள் குறித்து பார்ப்போம்.

குளத்தூர்

வளர்ப்பு மீன்கள், மீன் தொட்டிகள் வாங்க சிறந்த இடம் குளத்தூர். சென்னையில் இருப்பவர்கள் வீட்டில் தொட்டி வைத்து மீன்களை வளர்க்க வேண்டும் என முடிவு எடுத்தால் முதலில் செல்வது இங்கு தான். மிக மிக குறைந்த விலையிஒல் மீன் வள்ர்ப்புக்கு தேவையான அனைத்தையும் வாங்கி விடலாம். மீன் தொட்டி, மோட்டர், ஃபுட், அலங்கார பொருட்கள், செடிகள் என அனைத்தும் ஒர் இடத்தில் குறைந்த விலையில் கிடைக்கும். ரூ. 10 முதல் மீன் ஜோடிகளையும் வாங்கலாம். அனைத்து விதமான வளர்ப்பு மீன்களும் இங்கு கிடைக்கும்.

kulathur fish market

பிராட்வே

சென்னை பிராட்வேயின் இருக்கும் மிகப் பெரிய பெட் மார்க்கெட் பற்றிய அறிமுகமே தேவைபடாது. இங்கு செல்லபிராணிகளை வாங்கலாம், அதே போல் விற்கவும் செய்யலாம். லவ் பேர்ட்ஸ் தொடங்கி புறா, கோழி குஞ்சு, நாய்கள், ஊனைகள், கிளிகள், மீன்கள், எலிகள், முயல்கள் என இங்கு ககிடைக்காத செல்ல பிராணிகளே இல்லை. குறைந்த விலையில், பட்ஜெட்டில் பெட் வாங்க மிகச் சிறந்த இடம். இது வாரத்தில் ஒரு நாள் மட்டுமே செயல்படும். ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இந்த மார்க்கெட் காலை முதல் மாலை வரை திறந்திருக்கும்.

chennai pet shop

மஸ்கான்சாவடி

மஸ்கான்சாவடியில் இருக்கும் கோழிக்கடை சென்னையில் மிகப் பெரிய பெட் மார்க்கெட்டாக உள்ளது. இங்கு வீட்டில் வளர்க்கக்கூடிய அனைத்து விதமான செல்ல பிராணிகளும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஹோம் டெலிவரி வசதியும் இங்கு இருப்பது கூடுதல் சிறப்பு.

இந்த பதிவும் உதவலாம்:பட்ஜெட்டில் டூர் செல்ல வேண்டுமா? இந்த இடங்களை பார்க்க ரூ. 5000 இருந்தால் போதும்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: shuttrstock
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP