herzindagi
vande bharat express ticket

vande bharat : வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் அப்படியென்ன ஸ்பெஷல்!

 மத்திய அரசு அறிமுகப்படுத்திய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-02-24, 15:41 IST

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலானது சென்னை முதல் பெங்களூர் வரையிலான வழிப்பாதையில் தற்போது இயங்கி கொண்ருக்கிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு, விரைவான பயணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி வந்தே பாரத் ரயிலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆரம்பத்தில் வந்தே பாரத் ரயில் குறித்து பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இருப்பினும் தற்போது வெற்றிக்கரமாக இந்த ரயில் இயங்கி கொண்டிருக்கிறது. அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் டிக்கெட் மற்றும் சேவைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

  • சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். அதாவது, திங்கள் முதல் ஞாயிற்றுகிழமையில் புதன்கிழமை தவிர மற்ற 6 நாட்களிலும் இயக்கப்படும்.
  • சென்னை சென்ட்ரல் – மைசூருவுக்கு ஏசி கட்டணம் ரூ.1,200 ஆகும். அதே போல் ஏசி சிறப்பு வகுப்பு பெட்டி கட்டணம் ரூ.2,295 என நிர்ணியிக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு ஏசி கட்டணம் ரூ.995 மற்றும் சிறப்பு வகுப்பு பெட்டி ரூ.1,885 ஆகும்.
  • சென்னை, சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்படும். மைச்சூர், காட்பாடி, கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
  • அதே போல் மறுமார்க்கமாக மைச்சூரில் மதியம் 1.05 மணிக்கு ரயில் கிளம்பி இரவு 7.30 மணிக்கு சென்னை வந்து சேரும்.
  • மற்ற விரைவு ரயில்களை போல இதிலும் முன்பதிவு வசதி உண்டு. அதே நேரம், முன்பதிவு, பயணத்தை ரத்து செய்தல், பணத்தை திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கான பிற விதிமுறைகள் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின்படி கடைப்பிடிக்கப்படுகிறது.

vandhe bharat

  • வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன. கிட்டத்தட்ட 1,128 பேர் அமர்ந்து செல்லாம். அதிநவீன வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் என பல்வேறு வசதிகள் பயணிகளுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன.
  • தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான ஆடியோ-விஷுவல் தகவல் அமைப்பு, ஆன்போர்டு ஹாட்ஸ்பாட் வைஃபை வசதிகளும் உள்ளன.
  • இந்தியாவில் அனைத்து ரயில்களையும்விட அதி வேகத்தில் செல்லக்கூடிய ரயிலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளது. இதில் இருக்கும் படிக்கட்டுக்கள் மாற்றுத்திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ரயிலுக்குள் ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்குச் செல்ல தானியங்கி கதவுகள் உள்ளன. அதே சமயம், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் எந்தவித சலுகையும் இல்லை.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com