leo box office: தமிழ் சினிமாவில் விஜயின் லியோ முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சன் சாதனைப் படைத்துள்ளது

விஜயின் லியோ பட ரிலீஸ் முதல் நாள் கலெக்சன் தமிழ்சினிமாவில் மைல்கல் என்று பேசப்படுகிறது 

  • Shobana M
  • Editorial
  • Updated - 2023-10-20, 13:16 IST
octo

விஜய் நடித்த லியோ படம் அக்டோபர் 19 ஆம் நாள் வெளியிடப்பட்டது. லியோ படம் ரசிகர்களிடையே பெரிய ரீச்சை எட்டியுள்ளது. படத்தின் ஒரு நாள் கலெக்ஷன் எவ்வளவு எனும் பேச்சு ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. தமிழ் சினிமாவில் விஜய் பெரும்பாலான ரசிகர்களால் போற்றப்படுகின்றார். அவருக்கு மார்கெட் மதிப்பும் அதிகம் ஆகும். லோகேஷ் கனகராஜ் இயக்குநராக ஹிட் அடித்துள்ளார். இவருடைய இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் முதல் நாளில் அதிக வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. பெரும் எதிர்பார்ப்புடன் ரெக்கார்டு பிரேக்கை தாண்டி லியோ சாதித்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இது பாக்ஸ் ஆபிஸில் ஹிட் எடுத்துள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் 120 கோடிக்கு மேல் முதல் நாள் மட்டும் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றது. லியோ படம் உலகம் முழுவதும் நேற்று திரையிடப்பட்டது. இது அதிக வசூல் செய்யப்பட்ட தமிழ் படமாகவும் ரெக்கார்டு உருவாக்கி உள்ளது.

விஜய்க்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால் இது தனித்துவத்துடன் பார்க்கப்படுகின்றது. ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் 113 கோடி வசூலுடன் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ரெக்கார்டைப் பிரேக் செய்து லியோ படமானது தற்போது 120 கோடி வசூலை செய்துள்ளதால் இது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ஹிட் அடித்துள்ளது என்று தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

vija

தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து எப்பொழுதும் ரசிகர்களுக்காக 4 மணிக்கு முதல் ஷோ நடைபெறும் ஆனால் இந்த முறை நேரம் கழித்து தான் படம் ரிலீஸ் ஆகியது. ஜெயிலர் படத்திலும் இதுபோல் நடைபெற்றது. லியோ ரிலீஸ் செய்வதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஃப்ரீ ரிலீஸ் புக்கிங் முழுவதுமாகச் செய்துள்ளனர். இந்த முறை ரோகிணி தியேட்டரில் லியோ ரிலீஸ் செய்யப்படவில்லை.

லியோ படமானது தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இங்கு ஒரு நாளில் மட்டும் 60 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

மேலும் படிக்க: பட்டையை கிளப்பும் பேடாஸ் லியோதாஸ் பாடல் ரிலீஸ்

உலக நாடுகளான வட அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் மொத்தம் 625 பகுதிகளில் லியோ படமானது ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உலக அளவில் 40 கோடிக்கு மேல் நேற்று லியோ படமானது வசூல் செய்துள்ளது. என்பது தகவல்கள் கிடைத்துள்ளன ஒரு நாளில் மட்டும் லியோ 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவில் லியோவானது சாதனை படைக்கும் இன்னும் தகவல்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.image sorce : Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP