சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நயன்தாரா வலம் வருகிறார். விக்னேஷ் சிவன் - நயன்தாரா 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.விக்கி, நயன் தம்பதிகள் வாடகை தாய் மூலம் இந்த ஆண்டு ட்வின்ஸ் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். தனது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன் என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.
நடிகை நயன்தாரா இதுவரை எந்த ஒரு சமூக வலைதளங்களில் இல்லாமல் இருந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் நடிகை நயன்தாரா எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை முன்னிட்டு விக்கேஷ் சிவன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நயன்தாரா பதிவிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு நாளில் உங்களைப் பற்றி நிறைய எழுத விரும்புகிறேன், ஆனால் நான் தொடங்கினால், சில விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த முடியாது என்று நினைக்கிறேன்.என் மீது நீங்கள் பொழிந்த அன்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் .உன்னை போல் யாரும் இல்லை !! என் வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகாகவும் மாற்றியதற்கு நன்றி!நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீங்கள் சிறந்தவர்.எங்களின் ஒவ்வொரு கனவும் நனவாகட்டும். மேலும் கடவுள் உங்களுக்கு உலகில் உள்ள எல்லா மகிழ்ச்சியையும் தர வேண்டும் என வேண்டி கொள்கிறேன் ‘ என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில் விக்கி, நயன் மற்றும் இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி கருப்பு - வெள்ளை காம்போவில் உடை அணிந்திருக்கின்றனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation