கேரளாவில் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை கேரளாவில் மட்டுமில்லாமல் பல மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழ் நடிகைகள் பலரும் ஓணம் பண்டிகையை கொண்டாடி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர்.
நடிகை கல்யாணி பிரயதர்ஷன் தமிழில் ஹீரோ படம் மூலம் அறிமுகமானார்.இவர் மலையாளத்திலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஹிருதயம் படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தில் நடித்து வருகிறார். கல்யாணி கேரளா சாரியில் ஓணம் பண்டிகையை கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.இதில் உடைக்கு ஏற்றமாதிரி அணிகலன்களை அணிந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
நடிகை மாளவிகா மோகனன் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். அதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார்.மாளவிகா மோகனன் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். தற்போது குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதில் ஓணம் புடவை கட்டியிருக்கும் மாளவிகா ட்ரெஷ்னல் லுக்கில் பார்க்க அழகாக இருக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம் : கர்ப்ப காலத்தில் சீரியலில் நடித்த நடிகைகளின் லிஸ்ட் இதோ..
நடிகை நஸ்ரியா தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து ராஜா ராணி, நய்யாண்டி ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் படத்தில் நஸ்ரியா நடிப்பு பாராட்டுக்களை பொற்றது. 2014 ஆம் ஆண்டு நஸ்ரியா- ஃபகத் பாசிலுக்கு திருமணம் நடைப்பெற்றது.அதன் பின்பு சிறிது ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். 2018 ஆம் ஆண்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘அண்டே சுந்தரநிக்கி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை நஸ்ரியா ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். இதில் வெள்ளை நிற சல்வார் அணிந்து தனது செல்லப்பிராணியுடன் கியூட்டாக போஸ் கொடுத்திருக்கிறார்.
கவர்ச்சி கன்னி என்று அழைக்கபடும் நடிகை யாஷிகா ஆனந்த் ஓணம் பண்டிகையை முன்னிட்டு போட்டோ ஷூட் செய்திருக்கிறார். இதில் க்ராப் டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்திருக்கிறார். உடையை மாடர்னாக அணிந்திருந்தாலும் ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை ட்ரெஷ்னல் லுக்கில் பின்னல் போட்டு மல்லிப்பூ வைத்திருக்கிறார். இந்த லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அபர்ணா தாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.அதையடுத்து கவின் உடன் இணைந்து டாடா படத்தில் நடித்தார்.இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை அபர்ணா தாஸ் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். சமீபத்தில் தான் சொந்தமாக கட்டிய வீட்டின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில் அபர்ணா தாஸ் பார்க்க அழகாக இருக்கிறார்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் வீட்டில் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதில் ஓணம் புடவை கட்டியிருக்கிறார்.புடவைக்கு கான்ட்ராஸ்ட் கலரில் வயலெட் நிறத்தில் ஜாக்கெட் அணிந்திருக்கிறார். கழுத்தில் நெக்லஸ் மற்றும் காதில் ஜிமிக்கி போட்டு ரசிக்க வைத்திருக்கிறார். அனுபமாவின் இந்த புகைப்படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com