தனது அழகாலும் வசீகர சிரிப்பாலும் தமிழ் ரசிகர்களை கட்டி போட்டவர் நடிகை தமன்னா. கேடி படத்தில் முதன் முதலாக நெகடிவ் வில்லி ரோலில் தோன்றினார். அழகிய வில்லி எனவும் புகழப்பட்டார். பின்பு எஸ். ஜே சூர்யாவுடன் நடித்தார். ரசிகர்கள் தமன்னாவுக்கு மில்க் பியூட்டி எனவும் பெயர் வைத்தனர். தனது 16 வயதிலேயே சினிமாவை கெரியராக தேர்ந்தெடுத்தவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கி, இந்தி என நடிக்க தொடங்கினார். விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம் என அனைவருடனும் ஜோடி சேர்ந்தார்.
ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கும் போதே கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் ஒருபக்கம் கவனம் செலுத்தினார் தமன்னா. தர்மதுரை, கல்லூரி, கண்ணே கலைமானே போன்ற படங்கள் பாராட்டுக்களை வாங்கி தந்தன. இந்தி பக்கம் சென்றவர் அங்கு தனது நடிப்பால் பலரையும் கவர்ந்தார். இப்போது, நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தில் தமன்னா ஆடி இருக்கும் காவாலயா பாடல் பட்டி தொட்டி எங்கும் செம்ம ஹிட். தமன்னா பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக தமன்னா குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது உலகில் மிகப் பெரிய 5 வது பெரிய வைரம் தமன்னாவிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் 2 கோடியாம். இந்த வைரம் தமன்னாவுக்கு கிஃப்ட்டாக வந்திருக்கிறது. அதை கொடுத்தவர் யார் தெரியுமா? நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா. கடந்த 2019 ஆம் ஆண்டு சீரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மா ரெட்டி என்ற படத்தில் தமன்னா நடித்து இருந்தார். இந்த படத்தை தயாரித்தது, ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா. அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தமன்னாவுக்கு இந்த வைரத்தை உபாசனா பரிசாக கொடுத்து இருக்கிறார்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.Images Credit: instagram
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation