தமிழ் சினிமாவில் பல ரீல் ஜோடிகள், ரியல் ஜோடிகளாக மாறியுள்ளனர். அஜித் -ஷாலினி தொடங்கி சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா என பலரும் ரசிகர்களால் கப்புள் கோல்ஸாகவே பார்க்கப்படுகின்றன. அந்த லிஸ்டில் புதியதாக இணைந்த ஜோடி கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன். நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே அவருக்கு பெண்கள் ரசிகைகள் உருவாகினர். சாக்லேட் பாயாக அறியப்பட்டார். தொடர்ந்து பல படங்கள் காதல் படங்களாகவே நடித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தேவராட்டம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் முதன் முறையாக பக்கா கிராமத்து மனம் வீசும் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கினார் கெளதம் கார்த்திக். அவருடன் இந்த படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் சேர்ந்து நடித்தார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர்களின் நட்பும் தொடர்ந்தது. ஒருக்கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர். 3 வருடமாக தொடர்ந்து காதலித்தவர்கள், கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பயங்கர சிம்பிளாக நடந்து முடிந்தது.
சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் இந்த ஜோடியை வாழ்த்தி இருந்தனர். திருமணத்திற்கு பிறகு கெளதம் கார்த்திக் சினிமா கெரியர் படு வேகம் எடுத்து சிறப்பாக மாறியுள்ளது. தொடர்ந்து பத்து தல, 1947 போன்ற படங்கள் கெளதம் கார்த்திக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளனர். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கெளதம் கார்த்திக், காதல் மனைவி மஞ்சிமாவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கிட்டத்தட்ட திருமணமாகி 1 வருடத்திற்கு பிறகு ஹனிமூன் சுற்றுலாவா? என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.
இருவரும் தங்களது சுற்றுலா படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர். செம்ம ரொமாண்டிக்காக இருவரும் தங்களது விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர். இவர்கள் வெளியிட்ட ஃபோட்டோஸ் மற்றும் வீடியோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்குமேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation