எதிர்நீச்சல் சீரியலில் திருவிழா கிளை மேக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட அழைக்க நந்தினி செல்கின்றார். ஞானத்தை அழைத்துப் பின் தனது கணவர் மற்றும் ஆதி குணசேகரனை அழைக்கத் தேடி செல்கிறார். அங்கு ஆதி குணசேகரன், கிள்ளிவளவன் கதிர், ஆகியோர் திருவிழாவில் ஜீவானந்தத்தையும் அப்பத்தாவையும் சாகடிப்பதற்கு தீட்டப்பட்டுள்ள திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்று பேசிக் கொள்கின்றனர்.
நந்தினி அவர்களைப் பார்த்து இவர்கள் ஏன் இங்கு நிற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு பின் புதிதாக வந்துள்ளவர் யார் என்று பார்த்துவிட்டுச் சாப்பிட கூப்புடுகிறார்.
எதிர்நீச்சல் வீட்டு பெண்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் சாப்பாடு சாப்பிடட வைக்கின்றனர். உடன் அப்பத்தா, பெண்களையும் அமர்ந்து சாப்பிடும் படி சொல்ல, அதனை எதிர்த்துக் கதிர் எங்களுடன் சரி சமமாகச் சாப்பிடுவதா என்று பேசுகின்றார். அப்பத்தா கொடுக்கும் தைரியம் தான் காரணம் என்றும் தெரிவிக்கின்றார். அதற்குத் தக்க பதிலடி கொடுத்த அப்பத்தா இவர்களின் சரிசமமாக உட்கார்ந்து சாப்பிடட்டும் என்று கூறுகின்றார்.
மேலும் படிக்க: எதிர்நீச்சல் திருவிழா ஏற்பாட்டில் தப்பி வந்த கதிர் செய்யபோகும் திட்டம் என்ன
கதிர், ஞானம் மற்றும் இவர்களை அடுத்து ஆதி குணசேகரன் குடும்ப வழக்கம் ஒன்று இருக்கின்றது. அதனைப் பின்பற்றித் தான் வாழ வேண்டும். முதலில் வீட்டு ஆண்கள் சாப்பிட வேண்டும் என்று எக்கச்சக்கமாகப் பேச, அப்பத்தாவும் இம்முறை சரியான வழக்கம் அல்ல எனப் பட்டம்மாள் பாட்டி பேசுகின்றார். மேலும் நந்தினி ரேணுகாவிற்கு இந்தப் பேச்சுக்கள் வெறுப்பை உண்டாக்குகின்றன.
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர் இதற்கிடையில் அப்படித்தா பார்த்துக் கொள்ளலாம் அனைத்தையும் என்று முடிவு செய்கின்றார். அப்பத்தாவிற்கும் ஆதி குணசேகரனுக்கும் இடையில் உறுதியான வாத பரிமாற்றங்கள் நடக்கின்றன. அடுத்தது கிளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி என்பது போல எதிர்நீச்சல் ஆடியன்ஸ் தங்களது கமெண்ட்ஸ்களை சோசியல் மீடியாவில் அள்ளி வீசி வருகின்றனர். புதிதாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ராம வேலய்யா மெனக்கெடுக்கிறார் என்று தெரிகின்றது.
எது எப்படியோ ஜவ்வு மாதிரி இத்தனை நாட்களாக இந்தத் திருவிழா நிகழ்ச்சிகளை வைத்து எதிர்நீச்சல் சீரியல் மெதுவாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது. சில சமயங்களில் படும் போராக இருந்தது. ஆனால் தற்போது அதனைக் குறைப்பதற்கு இயக்குனர் திருவிழாவுக்குக் கிளைமாக்ஸ் வைக்கிறார்.
இந்த முறை ஜீவானந்ததுடன் இணைந்து அப்பத்தாவையும் போட்டுத்தள்ள கிள்ளிவளவனிடம் கடும் காட்டமாக ஆதி குணசேகரன் பேசுகின்றார். கதிர் தான் வைத்துச் செய்வதாகச் சொல்ல ஆதி குணசேகரன் தடுக்கின்றார். கிள்ளி வளவன் இந்த முறை நிச்சயம் ஜீவானந்தம் கதையை முடித்துக்கட்ட ஆயுத்தமாகி வருகின்றார்.
ஜீவானந்தம் தொடர்பில் இல்லாமல் போகும் நேரத்தில் அப்பத்தாவும் குழப்பத்தில் என்ன நடந்தது என்று யோசிக்கின்றார். ஜான்சி ராணி வேவு பார்ப்பது ஒரு பக்கம் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி அனைவரையும் கோவப்படுத்துகின்றது. பட்டம்மாள் பாட்டியை அரணாக இருந்து காக்க நான்கு பெண்களும் தயாராகின்றனர். இதனைப் பார்த்து யார் நின்னாலும் எதுவும் செய்ய முடியாது என்பது போல் தெனாவட்டாகப் பேசுகிறார். யாருக்கு என்ன நடக்கப் போகிறது. எதிர்நீச்சல் சீரியலில் பெண்களின் நிலைமை என்னவாகும். எனப் பல்வேறு கேள்விகளுடன் எதிர்நீச்சல் சீரியல் ஆடியன்ஸ் காத்திருக்கின்றனர்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation