Anchor Jacquline Photos : ஆளே மாறிட்டாங்க! தொகுப்பாளினி ஜாக்குலினின் வேற லெவல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோஸ்..

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ஜாக்குலினின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 
Jacquline transformation hot photos viral

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியை ரக்‌ஷன் உடன் இணைந்து ஜாக்குலின் தொகுத்து வழங்கினார். ஜாக்குலின் -ரக்‌ஷன் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்குவது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.ஜாக்குலின் கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு ஜாக்குலின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொண்டார் ஜாக்குலின்.

இயக்குனர் தேசிங்கு இயக்கத்தில் துல்கர் சல்மான், ரக்‌ஷன் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ரக்‌ஷனின் தோழியாக நடித்திருந்தார். ஜாக்குலின் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார்.அதில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

குண்டாக இருந்த ஜாக்குலின் வொர்க்கவுட் செய்து தற்போது ஃபிட்டாக மாறியிருக்கிறார். ஃபிட்னஸ் குறித்த வீடியோக்களையும் ஜாக்குலின் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருக்கிறார்.

jacquline instagram

போட்டோ ஷூட்

தொக்குப்பாளினி ஜாக்குலின் லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதில் சாக்லெட் கலர் பாடி கான் உடையை அணிந்திருக்கிறார். உடைக்கு ஏற்றமாதிரி நியூட் மேக்கப்பையே தேர்வு செய்திருக்கிறார். ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை கீழே மட்டும் கேள்ஸ் செய்திருக்கிறார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP