Ritika Singh : 'நன்னாரே’பாடலுக்கு ஆட்டம் போட்ட ரித்திகா சிங்.. வைரல் வீடியோ..

நடிகை ரித்திகா சிங் நன்னாரே பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 
rithika singh dance for nannare song

ரித்திகா சிங் நிஜத்தில் ஒரு கிக் பாக்சர் ஆவார்.தமிழில் இறுதிச்சுற்று என்ற படம் மூலம் அறிமுகமானார். இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீரராகவே நடித்திருப்பார். முதல் படத்திலேயே ரித்திகா சிங்கிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.அதையடுத்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார். அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஜய் ஆண்டனியுடன் இணைந்து கொலை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரித்திகா சிங் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் காமெடியான வீடியோக்களை பதிவிடுவார்.
ritika latest photos
தற்போது நன்னாரே பாடலுக்கு தனது ரூமில் நடனமாடி வீடியோவை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் சூப்பர் எனர்ஜியில் ரித்திகா சிங் ஆடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பல கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸை அள்ளி வீசி வருகின்றனர். இது வரை இந்த வீடியோ 2 லட்சம் லைக்ஸைகளை பெற்றுள்ளது .

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP