Rashmika Mandanna :நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இத்தனை மொழிகள் தெரியுமா?

நடிகை ராஷ்மிகா மந்தனா தனக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பதை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார்.

 
rashmika mandanna knows  languages told in instagram

பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷ்னல் க்ரஷ் என அழைக்கின்றனர். ராஷ்மிகா ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அல்லு அர்ஜுன் உடன் இணைந்து புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். ராஷ்மிகா தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிசியான நடிகையாக வலம் வந்தாலும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். ராஷ்மிகா ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் அடிக்கடி உரையாடுவார்.சமீபத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் எத்தனை மொழிகள் பேசுவீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ராஷ்மிகா 6 மொழிகள் என பதில் கூறியிருந்தார். ஆனால் எந்தெந்த மொழிகள் என குறிப்பிடவில்லை. இதை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவுக்கு இத்தனை மொழிகள் தெரியுமா என்ற ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

rashmika in black dress

ராஷ்மிகா மந்தனாவை 38.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP