பிரியா பிரகாஷ் வாரியர் ’ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதையடுத்து தெலுங்கு, கன்னடா படங்களில் நடித்தார். தற்போது ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா, யாரியான் 2, லவ் ஹேக்கர்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. ப்ரியா வாரியர் நடிகை மட்டுமில்லாமல் பாடகியும் ஆவார். திரைப்படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.
பிரியா வாரியர் ஒரு ட்ராவல் லவ்வர். பல வெளிநாடுகளுக்கு சென்று சுற்றிப்பார்த்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். மேலும் சோஷியல் மீடியா ஃபாலோவர்ஸிற்காக அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்வார். நடிகை பிரியா வாரியர் லேட்டஸ்டாக பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.
காஸ்ட்யூம்
இந்த புகைப்படத்தில் வெள்ளை நிற புடவை கட்டியுள்ளார். டிசைனரை ஜாக்கெட்டை கவர்ச்சியாக அணிந்திருக்கிறார். மேக்கப்பை பொறுத்தவரை கண்ணிற்கு காஜல், மை மற்றும் மஸ்காரா போட்டிருக்கிறார். உதட்டிற்கு நியூட் கலர் லிப் ஸ்டிக்கை போட்டுள்ளார். அணிகலன்களை பொறுத்தவரை காதில் ஜொலிக்கும் கற்கள் பதித்த தோடு போட்டிருக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம் : காலையில் எழுந்ததும் முதலில் இதான் சாப்பிடுவேன்! நடிகை சாக்ஷி அகர்வாலின் ஃபிட்னஸ் ரகசியம்..
பிரியா வாரியர் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். இவரின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com