Actress Nayanthara : '9 skin' என்ற புதிய பிசினஸ் தொடங்கிய நயன்தாரா!

நடிகை நயன்தாரா ‘9 ஸ்கின்’ என்ற புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

 
nayanthara skin business start up

தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் “சந்திரமுகி” படத்தில் இணைந்து நடித்தார். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அவர் நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன. ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார் நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன் இணைந்து ப்ளாக்பஸ்டர் படம் தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார்.

நயன்தாரா நடிகையாக ஒரு பக்கம் கலக்கி வந்தாலும், லிப் பாம் கம்பேனி என்ற நிறுவனத்தையும் நடத்தி தொழில் முனைவோராகவும் அசத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க தற்போது 9Skin என்ற பிராண்டின் மூலம் சர்வதேச தொழிலதிபராக உருவெடுத்துள்ளார்.

சரும பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் டெய்சி மோர்கன், பிிரபல நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். '9 ஸ்கின்' என பெயரிடப்பட்டிருக்கும் இவர்களது அழகு சாதன பொருட்களின் வணிக முத்திரையை, மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்கள்.

nayanthara insert

தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும், சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை உயர் தரத்துடன் வழங்குவதன் மூலம் தொழில் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் நுழைந்து அவர்களுடைய பிராண்டான '9 ஸ்கின்' மூலம் இயற்கையான அழகை மேம்படுத்தும் புதுமையான தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை வழங்கவிருக்கிறார்கள்.செப்டம்பர் 29ஆம் தேதியன்று மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இந்த பிராண்டின் அறிமுகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP