தமிழ் சினிமாவில் பிரபல தனக்கென தனி அடையாளத்தை தேடி கொண்டவர் வைகை புயல் வடிவேலு. காமெடியன், ஹீரோ, பாடகர், வில்லன், துணை நடிகர் என பலமுகங்களை கொண்டவர். தனது காமெரி திறமையால் தமிழ் சினிமாவை சில ஆண்டுகளாக கட்டி போட்டு வைத்திருந்தார். சில சர்ச்சைகள் காரணம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தவர் தற்போது மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் உதய் நிதி ஸ்டாலின் நடிப்பில் இவர் நடித்திருந்த மாமன்ன திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து வடிவேலு நடிப்பில் சந்திரமுகி போன்ற படங்கள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில் வடிவேலுவின் 2வது தம்பி ஜெகதீஸ்வரன் கல்லீரல் பாதிப்பால் உடல்நலமின்றி நேற்று காலை மரணமடைந்தார். இவரும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சிம்பு கதாநாயகனாக நடித்த காதல் அழிவதில்லை உள்ளிட்ட 2 படங்களில் நடித்துள்ளார். பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு விலகி தனியாக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார் ஜெகதீஸ்வரன். இவர் சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் இவரின் உயிர் பிரிந்தது. இறுதி அஞ்சலி செலுத்த வடிவேலு குடும்பத்துடன் மதுரை வந்தடைந்தார். அரசியல் தலைவர் பலரும் ஜெகதீஸ்வரன் உடலுக்கு மரியாதை செலுத்த நேரில் வந்திருந்தனர். அதனைத்தொடர்ந்து ஜெகதீஸ்வரன் உடல் நேற்ரு மாலை தகனம் செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவின் தயாரும் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
அவரை தொடர்ந்து இப்போது வடிவேலுவின் தம்பியும் மரணமடைந்திருப்பது பெரும் த்ய்டரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வடிவேலு தம்பி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “உடன்பிறந்த உற்ற துணையான தன் தம்பியை இழந்து வாடும் வடிவேலுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”என குறிப்பிட்டுள்ளார். மேலும், உதய்நிதி வடிவேலுவை ஃபோனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation