விஜய் டிவி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட் காமெடியர் ரோபோ ஷங்கர். சன் டிவியில் அசத்த போவது யாரு, விஜய் டிவியில் கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் போல் நடனம் ஆடுவதில் ரோபோ ஷங்கர் வல்லவர். கமலின் வெறித்தனமான ரசிகரான ரோபோ ஷங்கர், பல முயற்சிகளுக்கு பிறகு வெள்ளித்திரை பக்கம் சென்றார். பல படங்களில் நடித்தார். தற்போது வெள்ளித்திரை காமெடி நடிகராக வலம் வருகிறார். இவரின் மனைவி பிரியங்காவை அனைவருக்கும் தெரியும். கன்னிமாடம் போன்ற படங்களில் நடித்தார்.
இவர்களின் ஒரே மகள் இந்திரஜா ஷங்கர் பிகில் படத்தில் பாண்டியம்மா ரோலில் நடித்தார். இந்த படம் அவருக்கு பெரும் வரவேற்பை வாங்கி தந்தது. அதன் பின்பு ஜீ தமிழில் ஒளிப்பரப்பன சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து விருமன் படத்திலும் நடித்தார். இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் இந்திரஜா வெளியிடும் ரிலீஸ் வீடியோக்களுக்கு லைக்ஸ் குவியும். அதே போல் அடிக்கடி ஃபோட்டோஷூட் படங்களையும் இவர் வெளியிடுவார்.
இந்நிலையில் இந்திரஜாவுக்கு கூடிய விரைவில் திருமணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்திரஜா, தனது அம்மாவின் தம்பி முறையான கார்த்திக்கை திருமணம் செய்யவுள்ளார். கார்த்திக் இந்திரஜாவுக்கு சொந்த மாமன் முறையாம். கார்த்திக், வெள்ளித்திரையில் இயக்குனராக முயற்சிகள் எடுத்து வருகிறாராம். ஆக மொத்தத்தில் குடும்பமே சினிமாவில் இருப்பதால் கார்த்திக் - இந்திரஜா திருமணம் படு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம்.
இதன் முதல்படியாக குடும்பத்துடன் சென்று முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திருமணம் அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறார் ரோபோ ஷ்ங்கர். இந்த புகைப்படங்களை இந்திரஜா, தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். இதுப்போக வெள்ளித்திரை பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என அனைவருக்கும் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இந்திரஜாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்திரஜா கடந்த வருடம் கல்லூரி படிப்பை முடித்தார்.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும்.ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation