Prabhu Deva : 50 வயதில் மீண்டும் அப்பாவான நடிகர் பிரபு தேவா! என்ன குழந்தை தெரியுமா?

50 வயதில் மீண்டும் அப்பாவாகியுள்ளார் நடிகர் பிரபு தேவா.  அவருடைய 2வது மனைவிக்கு  குழந்தை பிறந்துள்ளது.

actor prabhudeva wife

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபு தேவா சுந்தரம் மாஸ்டரின் மகன் ஆவார். பிரபு தேவாவுடன் சேர்த்து சுந்தரம் மாஸ்டருக்கு 2 மகன்கள். ராஜ சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத். இவர்கள் மூவர் குறித்த அறிமுகமே தேவையில்லை. டான்ஸ், நடிபுபு என கலக்குவார்கள். இவர்களில் பிரபு தேவா டான்ஸுடன் நின்று விடாமல் இயக்கம், தயாரிப்பிலும் கவனம் செலுத்தினார். பல்வேறு விருதுகளையும் வாரி குவித்துள்ளார்.

பிரபுதேவாவுக்கு ஏற்கெனவே 3 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் பிரபுதேவாவின் தோல் உயரத்திற்கு வளர்ந்து நிற்கிறார். சமீபத்தில் பிரபு தேவா தனது மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவிலும் ஷேர் செய்து இருந்தார். பிரபு தேவாவின் மூத்த மனைவி ரம்லாத். இவர்கள் இருவரும் ஏற்கெனவே விவாகரத்து வாங்கி விட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபு தேவாவும் நயன்தாராவும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் திடீரென்று பிரிந்தனர்.

prabhu deva

இந்நிலையில் கடந்த ஆண்டு பிரபுதேவா பெண் மருத்துவர் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டார். ஜோடியாக இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்ற புகைப்படம் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த ஜோடிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. அதுமட்டுமில்லை சுந்தரம் மாஸ்டரின் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் வாரிசு இந்த குழந்தை தான். இதனால் மொத்த குடும்பமும் செம்ம ஹேப்பியில் உள்ளனர். பிரபு தேவாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.Images Credit: instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP