
பொதுவெளியில் தலை காட்டாத நடிகர் அஜித் பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பொதுமக்கள் அதிகம் கூடும் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு களித்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். அப்போது மைதானத்தில் தல தல கோஷம் அதிர்ந்தது. ஏற்கனவே தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் செல்லமாக தல தோனி என அழைக்கும் நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்றழைக்கப்படும் அஜித்குமார் ஒரே இடத்தில் சங்கமித்ததால் மைதானத்தில் சத்தம் விண்ணை பிழந்தது.
யார் தன்னை வம்படியாக அழைத்தாலும், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் அவற்றில் பல வருடங்களாக பங்கேற்றாமல் இருந்த நடிகர் அஜித்குமார் முதல் முறையாக மக்கள் கூடும் பொதுஇடத்திற்கு வருகை தந்து கிரிக்கெட் போட்டியை ரசித்துள்ளார். அவருடன் மனைவி ஷாலினி, ஆத்விக், அனுஷ்கா, ரிச்சர்ட் ஆகியோரும் உடனிருந்தனர். பில்லா பட பாணியில் கருப்பு நிற கோட் சூட் அணிந்து ஸ்டைலாக மாஸாக அஜித்குமார் மைதானத்தில் என்ட்ரி கொடுத்தார். அஜித் குமார் வருகை தந்த சில நிமிடங்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் அவருடன் இணைந்து போட்டியை ரசித்து பார்த்தார். சிவகார்த்தியேனும் அவரது மனைவி ஆர்த்தியோடு வந்திருந்தார். இரண்டரை நிமிட ஸ்ட்ராஜெடிக் டைம் அவுட்டில் அஜித்தை காண்பித்து கொண்டிருந்தனர். நடிகர் அஜித்தும் ரசிகர்களுக்காக கையை உயர்த்திக் காட்டினார்.
THALA 😎💥✌️💥 #AjithKumar pic.twitter.com/h7CMgkTRLM
— AJITHKUMAR TEAM ONLINE🐉 (@AkTeamOnline) April 25, 2025
முன்னதாக ஏப்ரல் 24ஆம் தேதி நடிகர் அஜித்தும் - நடிகை ஷாலினியும் 25வது திருமண ஆண்டை பூர்த்தி செய்ததை உற்காசமாக கொண்டாடியுள்ளனர். இருவரும் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடும் வீடியோ வெளியானது. அதில் அஜித் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஸ்ரீதர் போல் ஜொலிக்க மனைவி ஷாலினிக்கு கேக் ஊட்டிவிட்டு மகிழ்கிறார். வரும் வாரத்தில் அஜித் உயரிய பத்ம பூஷண் விருதினை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் பெறுகிறார். கார் ரேஸிங்கில் மூன்று வெற்றி, குட் பேட் அக்லி வசூல் வேட்டை, பத்ம விபூஷண் விருது, 25வது திருமண ஆண்டு என அஜித்திற்கு இந்தாண்டு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com