herzindagi
tamil winter tips

Lip Care Tips : குளிர்காலத்தில் உதடுகளை பராமரிக்க இதை செய்யுங்கள்!

குளிர்காலத்தில் உதடுகளைப் பராமரிப்பது எப்படி? என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.  
Editorial
Updated:- 2023-08-07, 15:37 IST

சிவப்பான, சாஃப்ட்டான உதடுகளை விரும்பாத பெண்கள் உண்டா? உதடுகளை அழகாக காட்ட பலவகையான உதடு சிகிச்சைகளும் இப்போது வந்து விட்டன. ஆனால், அந்த சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் நம் உதடுகளை அதிக அளவிற்குச் சேதப்படுத்துகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? எனவே, வீட்டில் கிடைக்கும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி உதடுகளை எவ்வாறு பராமரிப்பது? என்ற குறிப்புகளை இந்தப் பதிவில் சொல்ல போகிறோம். இந்த பொருட்கள் உதடுகளுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. வாருங்கள் விரிவாக பார்ப்போம்.  

தேவையான பொருட்கள் 

  • தேன் – 2 டீஸ்பூன் 
  • பச்சை பால் – 2-3 டேபிள் ஸ்பூன் 
  • ரோஸ் வாட்டர் – 2 சொட்டு 

தேனின் நன்மைகள் 

  • இயற்கையான முறையில் தோலை உரித்து உதடுகளை மென்மையாக்குவதில் தேன் மிகவும் பயன்படுகிறது என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 
  • இது, உதடுகளில் இருக்கும் துளைகளை சுத்தம் செய்கிறது. 
  • உதடுகளை மென்மையாக வைத்திருக்க தேன் மிகவும் பயன்படுகிறது. 
  • மேலும் இது உதடுகளை ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது. 

இந்த பதிவும் உதவலாம்: காபி தூளை கையில் எடுங்கள் முகப் பிரச்சனைகளை விரட்டுங்கள்

பச்சை பாலின் நன்மைகள் 

  • உதடுகளின் தோலை மென்மையாக்க உதவுகிறது. 
  • ஏனெனில் இதில் வைட்டமின்-A சத்துகள் நிறைந்துள்ளன.  
  • பச்சை பால் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. 
  • இது, இயற்கையாகவே முகத்தில் இருக்கும் துளைகளை ஆழமாகச் சுத்தம் செய்கிறது.

honey tips

ரோஸ்வாட்டரின் நன்மைகள்

  • ரோஸ் வாட்டர் உதடுகளை சிவப்பாக மாற்ற உதவுகிறது. 
  • இது ஒரு இயற்கையான டோனராக செயல்பட்டு உதடுகளின் கருமையை நீக்குகிறது. 
  • இதில் வைட்டமின்-C இருப்பதால் உதடுகளை ஈரப்பதமாக்குகிறது

milk tips

தயாரிக்கும் முறை 

  • லில் பாம் தயாரிக்க, முதலில் ஒரு கிண்ணத்தில் 1 முதல் 2 டீஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ளவும். 
  • பிறகு, அதில் 2 ஸ்பூன் பச்சை பாலை சேர்க்கவும். 
  • இப்போது அதில் 2 முதல் 3 சொட்டு ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.  
  • இப்போது மூன்றையும் நன்றாக கலக்கவும். 
  • கலவையைக் குளிர்விக்க, ஃபிரிட்ஜிலும் சிறிது நேரம் வைக்கலாம்.  

பயன்படுத்தும் முறை  

  • இரவில் சரும பராமரிப்பு முறைகளை செய்யும் போது இதையும் உதட்டுக்கு தடவவும் 
  • 10 முதல் 15 நிமிடங்கள் வரை உதட்டில் அப்படியே விடவும் 
  • வாரத்திற்கு 3 முறையாவது இரவில் இதை பயன்படுத்தவும்.  

குறிப்பு 

எந்தவொரு வீட்டு வைத்தியத்தையும் முயற்சி செய்யும் முன்பு பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பு முயற்சி செய்யவும்.  

இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் பளீச் முகத்திற்கு கைக்கொடுக்கும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

நீங்களும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி குளிர்காலத்தில் உங்கள் உதடுகளைப் பராமரிக்கலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

 

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com