herzindagi
cucumber beauty tips

Cucumber Face Pack : முகத்தை தங்கம் போல் ஜொலிக்க செய்யும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

சருமம் மற்றும் முக அழகுக்கு வெள்ளரிக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 
Editorial
Updated:- 2023-08-08, 14:35 IST

காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதனால்தான் பழங்கள் மற்றும் காய்கறிகள் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது. இதனை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை தரும். கோடை காலத்தில் வெள்ளரிக்காயை உட்கொண்டால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனையே வராது.

இதேபோல், வெள்ளரிக்காயை முக அழகை கூட்டவும் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் வெள்ளரிக்காயை முகத்தில் தடவி வரவும். வெள்ளரிக்காய் தோல், சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. இன்று இந்த பதிவில் சருமம் மற்றும் முக அழகுக்கு வெள்ளரிக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

வெள்ளரிக்காயை வைத்து முகத்தை சுத்தம் செய்தல்

வெள்ளரிக்காயை வைத்து முகத்தை எப்படி அலசுவது?

  • வெள்ளரி சாறுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • இப்போது அதை உங்கள் முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்க்கவும்.
  • கடைசியாக முகத்தை நீரால் அலசவும்.
  • கற்றாழை பெரும்பாலான சரும வகைகளுடன் பொருந்தக்கூடியது. எனவே முகத்தை சுத்தம் செய்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். 

ஃபேஸ் மாஸ்க் தயாரித்தல்

உங்கள் முகத்தில் பருக்கள் உள்ளதா? முகப்பரு உள்ள சருமத்தில் வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இது முகப்பருவை குறைக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: முதுகு பக்கம் கருப்பா இருக்கா? அதை எப்படி சரிசெய்ய வேண்டும் தெரியுமா?

தேவையான பொருட்கள்

  • தேயிலை மர எண்ணெய் – 2 சொட்டு
  • வெள்ளரிக்காய் சாறு – 1 கப்

செய்ய வேண்டியவை

  • வெள்ளரிக்காய் சாறுடன் தேயிலை மர எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • இப்போது இந்த கலவையை ஃபேஸ் மாஸ்க் போல் முகத்தில் பூசவும்.
  • முகப்பரு மீதும் இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
  • இந்த ஃபேஸ் மாஸ்க், சரும வறட்சி மற்றும் வெடிப்புகளை குறைக்கிறது.

குறிப்பு: முகத்தை ஈரப்பதமாக்குவதற்கு முன்பு வெறும் சருமத்தில் தேயிலை மர எண்ணெயை தடவ கூடாது. 

cucumber tamil tips

டோனராகவும் பயன்படுத்தலாம்

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க டோனர் பயன்படுத்த வேண்டும். வெள்ளரிக்காய் உதவியுடன் வீட்டிலேயே எளிதாக டோனர் தயாரிக்கலாம்.

வெள்ளரிக்காயை வைத்து எப்படி டோனர் தயார் செய்வது?

  • முதலில் வெள்ளரிக்காயின் தோலை நீக்கி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
  • பின்பு வெள்ளரிக்காய் துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் குறைந்த தீயில் வைத்து 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். 
  • இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் மைய அரைத்து எடுத்து கொள்ளவும். 
  • பின்பு இதை வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக எடுக்கவும். இந்த சாறை பாட்டிலில் ஊற்றி வைத்து டோனராக பயன்படுத்தலாம். 
  • தேவைப்பட்டால் இதில் ரோஸ் வாட்டர் மற்றும் விட்ச் ஹசல் சாறையும் சேர்த்து பயன்படுத்தலாம். 
  • முகத்திற்கு பல நன்மைகளை வழங்கும் வெள்ளரிக்காய் டோனர் தயார். 

எப்படி பயன்படுத்துவது?

  • முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும்.
  • இப்போது வெள்ளரிக்காயில் செய்யப்பட்ட இந்த டோனரை முகத்தில் தடவவும்.
  • இதை பயன்படுத்தினால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

குறிப்பு: வெள்ளரிக்காயில் செய்யப்பட்ட இந்த டோனரை 2-3 நாட்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது.

 

இந்த பதிவும் உதவலாம்: சருமத்தை பளபளப்பாக மாற்ற இந்த 4 ஃபேஸ் மாஸ்க்குகள் போதும் 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

 

Images Credit: freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com