herzindagi
coffe face tips

Coffee Powder Benefits for Face in Tamil: காபி தூளை கையில் எடுங்கள் முகப் பிரச்சனைகளை விரட்டுங்கள்

முகத்திற்கு காபி தூள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 
Editorial
Updated:- 2023-02-09, 17:33 IST

உங்கள் மனநிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதை ஒரு கப் காபி சரிசெய்துவிடும். அதுபோல தான் முகத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் காபி தூள் அதை எளிதில் சரிசெய்துவிடும். காபி தூளில் இருக்கும் மூலப் பொருட்கள் முகத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன.

இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் காஃபிக் அமிலம் சருமத்தை பிரகாசமாக்கி ஜொலிக்க வைக்கின்றன. வயதான தோற்றத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகின்றன. அதற்கு தினமும் காபி ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் சரும செல்களில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. மேலும்,சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

கரும்புள்ளிகளை குறைக்கும் காபி மாஸ்க்

காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை கரும்புள்ளிகளை குறைக்க பெரிதும் உதவுகிறது. அதே சமயம் முகத்தில் பருக்கள், மற்றும் நீர்க்கட்டிகள் இருந்தால் அப்போது இதை பயன்படுத்த வேண்டும். பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை குறைக்க மட்டுமே காபி தூள் பயன்படுகிறது.

coffe mask

முகத்தை வெள்ளையாக்கும் காபி மாஸ்க்

காபி தூள் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது UVA மற்றும் UVB கதிர்களின் விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இது சருமத்தில் உள்ள மெலனின் நிறமியைக் குறைக்க உதவுகிறது. எனவே முகத்தில் ஏற்படும் கருத்திட்டுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்:பெண்களின் பளீச் முகத்திற்கு கைக்கொடுக்கும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

coffee facemask

தயாரிக்கும் முறை

  • ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் காபி தூள், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
  • இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும்.
  • பின்பு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும்.
  • இறுதியாக மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும்.

இந்த பதிவும் உதவலாம்:பெண்களின் முகத்தை ஜொலிக்க வைக்கும் வாழைப்பழம்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com