பெண்கள் அனைவரும் லிப்ஸ்டிக் போடுவதை அதிகம் விரும்புகின்றனர். அதற்கேற்ப பல வகையான லிப்ஸ்டிக்கள் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன. லிக்விட் லிப்ஸ்டிக் தொடங்கி க்ரீமி லிப்ஸ்டிக் வரை பலவகையான லிப்ஸ்டிக் ஷேட்களும் இதில் அடங்கும். இதனுடன் பலவண்ணங்களில் வெவ்வேறு வகையான லிப்ஸ்டிக்களை நீங்கள் எளிதாகப் பெற முடிகிறது. அதே சமயம் பலவகையான சரும பிரச்சனைகளும் இந்த குளிர்காலத்தில் ஏற்படுகின்றன. அதில் வறட்சி என்பது பொதுவானது. பருவநிலை மாற்றத்தின்போது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் முகம் தொடங்கி உதடுகள்வரை வறண்டு போகத் தொடங்குகின்றன.
லிக்விட் லிப்ஸ்டிக்கை தவிர்க்கவும்
குளிர்காலத்தில் உங்கள் உதடுகள் ஏற்கனவே வறண்டு இருப்பதால் நீங்கள் லிக்விட் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், லிக்விட் லிப்ஸ்டிக் உபயோகிப்பது உங்கள் உதடுகளை இன்னும் வறண்டு போக செய்யும். ஒருவேளை நீங்கள் வேற வழியின்றி லிக்விட் லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு முன்பு உதடுகளை ஈரப்பதமாக்க வேண்டும். இதற்கு நீங்கள் லிப் ஆயில் அல்லது லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உதடுகளுக்கு விளக்கெண்ணெய் தடவுவது இவ்வளவு நல்லதா?
லிப் க்ளாஸை பயன்படுத்தவும்
நீங்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்த விரும்பினால் அது மேட் லிப்ஸ்டிக்காக இருந்தால் அதன் மீது லிப் க்ளாஸ் பயன்படுத்தலாம். இப்படி செய்வதால் உங்கள் உதடுகள் வறண்டு போகாது. இவை உதட்டுக்கு நல்ல தோற்றத்தை அளிக்கும். மேட் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்துவதற்கு முன் உதடுகளில் லிப் பாம் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் லிப் க்ளாஸை பயன்படுத்திய பிறகு உங்கள் உதடுகள் இன்னும் அழகாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்:குளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி?
க்ரீமி லிப்ஸ்டிக்கே சிறந்தது
குளிர்காலத்தில் உதடுகளை வறட்சியிலிருந்து பாதுகாக்க, மேட் அல்லது லிக்விட் லிப்ஸ்டிக் பதிலாக க்ரீம் வடிவிலான லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். ஏனென்றால், க்ரீம் அடிப்படையிலான லிப்ஸ்டிக்குகளில் ஏற்கனவே நிறைய லிப் ஆயில் உள்ளதால் இது உதடுகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
குளிர்காலத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் வாங்குவது மற்றும் பயன்படுத்துவது குறித்த எங்கள் குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பதிவை பகிர மறக்காதீர்கள். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation