
குளிர்காலம் தொடங்கியவுடன், சரும பிரச்சனைகளும் தொடங்கிவிடுகின்றன. உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதும் இதில் அடங்கும்.
குளிர்காலம் வந்துவிட்டால் சருமம் தொடர்பான பிரச்சனைகளும் வந்துவிடுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது வழக்கமான பிரச்சனையாகும். சில சமயங்களில் உதடுகளிலிருந்து ரத்தமும் வர தொடங்கும்.
பல பெண்களுக்கு மிகவும் வறண்ட உதடுகள் காணப்படுகிறது. அவர்களுக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை. முகத்தைப் போலவே, உதட்டின் அழகிலும் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் சருமத்தின் அழகுக்காக பொருட்களைப் பயன்படுத்துவது போலவே, உதட்டுக்கான பொருட்களையும் பயன்படுத்துவது சிறந்தது. இதில் மிக முக்கியமான ஒன்று லிப் பாம். இன்று இந்த பதிவில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

குளிர்காலத்தில் தான் உதடுகள் அதிகம் பாதிக்கப்படும். பெரும்பாலான பெண்களுக்கு உதடுகளை திரும்பத் திரும்ப நக்கும் பழக்கம் இருக்கும். அப்படிச் செய்யக்கூடாது. இது உதடுகளை ஈரப்பதமாக்கினாலும், சிறிது நேரத்தில் வற்ற செய்துவிடும். உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் காரணமாக, உதடுகள் வறண்டு போகத் தொடங்குகிறது.

குளிர்காலத்தில் உதடுகள் வெடிப்பது மிகவும் பொதுவான பிரச்சனையாகும். இதுபோன்ற சூழலில், உதடுகளை மென்மையாக மாற்ற, நீங்கள் வாஸ்லின் அல்லது லிப் பாம் பயன்படுத்தலாம். அசல் பெட்ரோலியம் ஜெல்லியை மட்டுமே பயன்படுத்தவும். இதனுடன், இயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்ட லிப் பாமை பயன்படுத்தலாம். இது உங்கள் உதடுகளை மென்மையாகவும் இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறமாகவும் வைத்திருக்கும்.
உங்கள் உதடுகளில் லிப் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். இதற்கு பீட்ரூட்டைப் பயன்படுத்தலாம். பீட்ரூட்டை அரைத்து சாறு எடுக்கவும். அதோடு, ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் வாஸ்லின், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்துக்கொள்ளவும். இந்த லிப் மாஸ்கை பயன்படுத்த, முதலில் உதடுகளை தண்ணீரால் சுத்தம் செய்யவும். பின்னர் இந்த லிப் மாஸ்கை உதடுகளில் தடவி லேசாக தேய்க்கவும். சுமார் 10-15 நொடிகளுக்குப் பிறகு, இந்த லிப் மாஸ்க்கை சுத்தமான துணியால் துடைக்கவும். இந்த மாஸ்க்கை ஒரு நாளைக்கு இரண்டு முறை போடலாம். இது உங்கள் உதடுகளை மிகவும் அழகாக மாற்றும்.
நீங்கள் லிப் பாம் பயன்படுத்த விரும்பவில்லை எனில், நெய் அல்லது தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது உங்கள் உதடுகளை வெடிப்பில் இருந்து பாதுகாப்பதோடு, இளஞ்சிவப்பு நிறமாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
