உதடு வெடிப்பு தொடங்கி கருமையான உதடு வரை அனைத்து விதமான உதடு பிரச்சனைகளையும் சரிசெய்கிறது விளக்கெண்ணெய்.
நீண்ட காலமாக இயற்கையான அழகு சாதனப்பொருளாக விளக்கெண்ணெய் இருந்து வருகிறது. பெரிய பெரிய நிறுவனங்களின் சரும தயாரிப்பு பொருட்களில் கூட விளக்கெண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதில் வைட்டமின்கள், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் விளக்கெண்ணெய் சருமத்திற்கு பல வகையில் நன்மை பயக்கிறது.
வெறும் சருமத்திற்கு மட்டுமல்ல உதடுகளுக்கும் சரிசமமான நன்மையை விளக்கெண்ணெய் தருகிறது. மற்ற பகுதிகளைக் காட்டிலும் உதடுகளின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதை அதிக அக்கறை எடுத்து கவனித்து கொள்ள வேண்டும்.
விளக்கெண்ணெய் ஈரப்பதம் நிறைந்தது. அதனால் இது உதடுகளின் வெளிப்புறத் தோல்களை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த பதிவில் RVMUA அகாடமியின் நிறுவனரும், பிரபல ஒப்பனை கலைஞர் மற்றும் சரும பராமரிப்பு நிபுணருமான ரியா வசிஷ்ட், உதடுகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
உதடுகளுக்கு விளக்கெண்ணெய் தரும் நன்மைகள்
உதடுகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. உதடுகளின் தோலுக்கு இது பல நன்மைகளை வழங்குகிறது.
- உதடுகளை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். இதில் பல வகையான கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் வறட்சியான உதடுகளுக்கு இது ஈரப்பதத்தை வழங்குகிறது.
- சில நேரங்களில் உதடுகளில் வறட்சி காரணமாக எரிச்சல் ஏற்படும். இந்த நேரத்தில் விளக்கெண்ணெய் பயன்படுத்தவும். இது உங்கள் உதடுகளை அதிக நீரேற்றத்துடன் வைத்துக்கொள்கிறது. இதனால் உதடுகளுக்கு அனைத்து வகையான எரிச்சலிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
- விளக்கெண்ணெய் உதடுகளை மென்மையாக்குகிறது. பொதுவாக, குளிர் காலத்தில் உதடுகள் அதிகமாக வறண்டு போகும். எனவே உதடுகளில் விளக்கெண்ணெய் தடவுவது இந்த பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
- உதடுகளின் நிறமாற்றம் பிரச்சனையை சரிசெய்யவும் விளக்கெண்ணெய் உதவுகிறது. கருமையான உதடுகள் உள்ளவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்துவது நன்மை தரும்.
கருமையான உதடுகளுக்கு விளக்கெண்ணெய்
கருமையான உதடுகளை சரிசெய்ய விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து லிப் பாம் தயாரித்து அதை உதடுகளுக்கு மேல் தடவலாம்.
தேவையான பொருட்கள்
- விளக்கெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- தேன் மெழுகு – 1 டேபிள் ஸ்பூன்
- கொக்கோ பட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
- வைட்டமின் E காப்ஸ்யூல் – 1
இந்த பதிவும் உதவலாம்:இந்த பதிவும் உதவலாம்: உங்கள் முடியை அலங்கரிக்க அருமையான டிப்ஸ்!!!
தயாரிக்கும் முறை
- முதலில் டபுள் பாய்லர் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். டபுள் பாய்லர் இல்லாதவர்கள் சூடு தாங்கும் சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம்.
- பின்பு அதில் விளக்கெண்ணெய், கொக்கோ பட்டர், தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் சேர்த்து அவை நன்கு கரையும் வரை கலந்து கொள்ளவும்.
- இந்த கலவை உருகி வரும் போது அதில் வைட்டமின் E காப்ஸ்யூல் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- பின்பு இதை சிறிய அளவிலான டின்னில் ஊற்றி ஆற விடவும் அது கெட்டி பதத்திற்கு வந்ததும் மூடி வைக்கவும்.
- இப்போது லிப் பாம் தயார். இதை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை உதட்டில் தடவவும்.
உதடு வெடிப்புகளை சரிசெய்யும் விளக்கெண்ணெய்
குளிர்காலத்தில் உதடு வெடிப்புகளால் சிரமப்படுபவர்கள் உதட்டுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
- ஷியா பட்டர் – 1 டீஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன்
- தேன் மெழுகு – 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
- தேன் – ½ டீஸ்பூன்
- பெப்பர்மிண்ட் எண்ணெய்- 2-3 சொட்டு
லிப் பாம் தயாரிக்கும் முறை
- முதலில் டபுள் பாய்லர் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். டபுள் பாய்லர் இல்லாதவர்கள் சூடு தாங்கும் சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம்.
- பின்பு அதில் தேங்காய் எண்ணெய், தேன் மெழுகு, ஷியா பட்டர் சேர்த்து உருக விடவும்
- இப்போது அதில் பெப்பர்மிண்ட் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- இப்போது அதை ஒரு சிறிய அளவிலான ஜாடியில் ஊற்றி 1 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
- இப்போது லிப் பாம் தயார். இதை உங்கள் உதட்டை சுற்றி தடவி, லேசாக மசாஜ் செய்யவும்.
உதடு பிரச்சனைகளிருந்து விடுபட விளக்கெண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம்.
இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation