skin care routine for ladies

வெயிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சிம்பிள் டிப்ஸ்!

<span style="text-align: justify;">&nbsp;மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.</span>
Editorial
Updated:- 2024-04-05, 16:58 IST

ஏப்ரல், மே, ஜூன் வந்தாலே வெயிலில் செல்லாத முகத்தைப் பார் கருப்பு இருக்கு. முதலில் முகத்தைக் கழுவிக் கொள் என்ற வார்த்தைகளை  அதிகளவில் நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆம் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் உடல் நலப் பாதிப்புகளால் அம்மை, வயிற்று எரிச்சல், சூடு பிடித்தல் போன்ற உடல் நலப் பாதிப்புகள் ஒருபுறம் ஏற்படுவதோடு சருமத்தையும் பாதிக்கிறது. 

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்குச் சென்றால் யார் நீ? என்று கேள்விக்கும் அளவிற்குக் கூட முகம் கருமையாகிவிடும். அதிலும் வெயிலைக் கண்டாலே உடம்பில் அலர்ஜி ஏற்படுபவர்களின் நிலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உடல் முழுவதும் பருக்கள் வந்து அரிப்பு மற்றும் எரிச்சலும் ஏற்படும் இது போன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிப்பதோடு, சருமத்தையும் பொலிவாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய சரும பராமரிப்புகள் குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்வோம்.

summer care tips

மேலும் படிக்க: முகத்தைப் பளபளப்பாக்குவதற்குக் கற்றாழையை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!

சருமத்தைப் பராமரிக்கும் முறைகள்:

  • கோடைக்காலத்திலும் சருமத்தைப் பராமரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத் தேன் சிறந்த தேர்வாக அமையும். இதை வைத்து முகத்தைப் பளபளப்பாக்குவதற்கு உதவக்கூடிய பேசியல் நீங்கள் மேற்கொள்ளலாம். பப்பாளி அல்லது அன்னாசிப்பழங்களை அரைத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். இதில் உள்ள புரோமலைன் என்ற  என்சைம், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்தைப் பளபளப்பாக்குகிறது.
  • கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தியும் கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய சரும பாதிப்புகளைத் தடுக்க முடியும். கற்றாழை மற்றும் மஞ்சள் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். வாரத்திற்கு ஒரு முறையாவது இதைப் பின்பற்றினால் சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகப்பருக்கள் வருவதையும் தடுக்க முடியும்.
  • கோடை விடுமுறையில் ஏதாவது டூர் ப்ளான் அல்லது சுப நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும் என்று திட்டம் இருந்தால், கடைகளில் அதிகம் விற்பனையாகும் அழகு சாதனப் பொருள்கள் தேவையில்லை. ஒருவேளை இருந்தால் உபயோகிக்கவும். அல்லது வீடுகளில் அரைத்து வைத்துள்ள தோசை மாவு பயன்படுத்தவும். தோசை மாவுடன் தக்காளி அல்லது மஞ்சள் சேர்த்து உபயோகிக்கும் போது கருவளையத்தை போக்கவும், முகத்தைப் பொலிவாக்கவும் உதவியாக உள்ளது.

home made facial

  • தயிர் அல்லது பாலாடையும் சரும பொலிவிற்கு நீங்கள் உபயோகிக்கலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முகத்தைக் கோடைக் காலத்திலும் முகத்தைப் பளிச்சிட வைத்திருக்க உதவியாக உள்ளது.

உடல் நலத்தைப் பாதுகாக்கும் முறை:

சருமத்தைப் பராமரிக்க இதுபோன்ற முறைகளைப் பின்பற்றினாலும் உடல் நலத்திலும்  அக்கறையும் செயல்பட வேண்டும். குறிப்பாக வெயிலுக்கு ஏற்ற ஆடைகளை அணியவும். காட்டன் ஆடைகளை அணிந்தாலும் இறுக்கமாக அணிவதைத் தவிர்க்க வேண்டும். இது உடலில் உள்ள வியர்வையை உறிஞ்ச உதவுகிறது. இது உடலில் அரிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க உதவியாக உள்ளது.

மேலும் படிக்க: தலைமுடி வலிமைப் பெற வாழைப்பழ ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்க!

summer drinks for health improve

உடல் சூட்டைக் குறைப்பதற்குக் காலை, இரவு என இருமுறை கட்டாயம் குளிக்க வேண்டும். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், ஜூஸ்கள் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்வது நல்லது.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com